ஹெலிகாப்டர் பயிற்சிக்காக அமெரிக்கா செல்லும் இந்திய கடற்படை விமானிகள்..

இந்த ஆண்டு இந்திய கடற்படை விமானிகள் அமெரிக்காவிற்கு ஹெலிகாப்டர் பயிற்சிக்காக செல்ல உள்ளனர்.

இந்தியா அமெரிக்காவின் சிகொர்ஸ்கி லாக்ஹீட் மார்டினிடம் இருந்து MH-60R Seahwak ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது. இதற்காக இந்திய விமானப்படை விமானிகள் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர்.

மொத்தமாக 24 MH-60R ஹெலிகாப்டர்களை 2.6 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது. இதில் முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த போது போடப்பட்டது. மேலும் MH-60Rs ரோமியோ ஹெலிகாப்டரும் இந்தியா வாங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த 24 ஹெலிகாப்டர்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்காம் தலைமுறை ரோமியோ ஹெலிகாப்டரில் டோர்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகளும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிராக பயன்படுத்கலாம்.

2018 ஆம் ஆண்டு 16 ஹெலிகாப்டர்கள் வாங்க இருந்த நிலையில் அதன் விலை தொடர்பாக இருந்த பிரச்சனையால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இப்போது 24 ஹெலிகாப்டர்களை வாங்க புதிதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய கடற்படையில் இருக்கும் கடல் ட்ரோன்களுடன் இந்த ஹெலிகாப்டரும் சேரும்போது, இந்திய கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *