மொரீஷியஸ் அகலேகா தீவில் இந்திய இராணுவ தளம்..? P-8I விமானத்தை நிறுத்த முடிவு..

மேற்கு இந்திய பெருங்கடலில் தனது இருப்பை அதிகரிக்க இந்தியா மொரிஷியஸின் அகலேகா தீவில் ராணுவ தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியா தனது P-8I நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் விமானத்தை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.

மேற்கு இந்திய பெருங்கடலில் சீனா தனது இருப்பை வேகமாக அதிகரித்து வருகிறது. ஜிபூட்டியில் தனது முதல் வெளிநாட்டு இராணுவ தளத்தை சீனா நிறுவியுள்ளது. குறிப்பாக மேற்கு இந்திய பெருங்கடலில் உள்ள ஆப்ரிக்க நாடுகளின் துறைமுகங்ளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இவை எதிர்காலத்தில் சீனாவின் இராணுவ தளமாக அமைய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் மொரிஷியஸ் தீவில் இருந்து 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகலேகா தீவில் 10,000 அடி தூரத்திற்கு ஓடுபாதை அமைத்து வருவது தெரியவந்துள்ளது. இந்தியாவின் P-8I Poseidon நீண்ட தூர கண்காணிப்பு விமானம் 123 அடி நீளம் மற்றும் 126 அடி இறக்கையை கொண்டுள்ளது. இந்த P-8I Poseidon மற்றும் சி 17 க்ளோப் மாஸ்டர் போன்ற விமானம் தரையிரங்கும் வகையில் அகலேகா தீவில் ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

Also Read: சத்தீஸ்கரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழப்பு..?

இந்த நிலையில் கடந்த வார தொடக்கத்தில் இந்தியா தனது P-8I Poseidon உளவு விமானத்தை இந்திய பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் பிரான்ஸ் கடற்படை போர்கப்பல்களுடன் இணைந்து கண்காணிப்பை மேற்கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக இந்தியா அனுப்பி வைத்தது.

இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், P-8I Poseidon விமானம் பிரான்ஸ் போர்கப்பல்களுடன் பயிற்சியில் ஈடுபடுவதோடு, மொசாம்பிக் கால்வாய் உட்பட தெற்கு இந்திய பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

Also Read: 1000 கோடி மதிப்பில் எதிரி இலக்கை கண்டறியும் ஸ்வாதி ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்..?

இதற்கு முன் P-8I Poseidon விமானம் 2020 ஆம் ஆண்டு ரீயூனியன் தீவில் பிரான்ஸ் நாட்டு விமானத்துடன் கூட்டு பயிற்சியில் பங்கேற்றது. அகலேகா தீவில் இராணுவ கட்டமைப்பை இந்தியா வலுப்படுத்தி வரும் நிலையில், இது சீனாவுக்கு அச்சுருத்தலாக இருக்கும், P-8I Poseidon கண்காணிப்பு விமானம் நீர்மூழ்கி கப்பல்களை எளிதில் கண்டறிந்து அழிக்க கூடியது. இதனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் கண்காணிப்பை அதிகரித்தாலும் அவற்றை கண்டறிந்து இந்திய விமானத்தால் அழிக்க முடியும். ஆனால் இவை இராணுவ பயன்பாட்டுக்காக அல்ல என இந்தியா கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.