8 ஆண்டுகால சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து நேபாள இராணுவத்திற்கு வெடிமருந்துகளை வழங்கும் இந்திய நிறுவனம்..

நேபாளம் 8 ஆண்டுகால சீன ஆதிக்கத்தை உடைத்து இந்திய தனியார் நிறுவனமான SSS டிபென்ஸ் நிறுவனத்திடம் இருந்து நேபாளம் இராணுவம் 2 மில்லியன் 5.56×45 மிமீ தோட்டாக்கள் மற்றும் ரைபிள்களை வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் அரசாங்கம்-அரசாங்கம் இடையிலானது.

சீனாவின் அதிகமான ஏலத்தொகையை முறியடித்து இந்தியாவின் SSS டிபென்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை வென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேபாளம் இந்தியாவில் இருந்து வெடிமருந்துகளை இறக்குமதி செய்து வந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட INSAS ரைபிகளுக்கு பதிலாக இந்திய இராணுவம் கொரிய மற்றும் அமெரிக்காவின் M4s. M16s ரைபிள்களை வாங்கியதால் நேபாளம் இந்தியாவிடம் இருந்து ஆயுதம் வாங்குவதை நிறுத்தியது.

கடந்த 2005 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுண்டரில் 43 நேபாள வீரர்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், துப்பாக்கி தரமற்றது, எங்களுக்கு சிறந்த ஆயுதங்கள் கிடைத்திருந்தால் இந்த நடவடிக்கையில் நாங்கள் வென்றிருப்போம் என தெரிவித்து இருந்தார்.

இந்திய இராணுவத்தில் சுமார் 35,000 நேபாள கூர்க்காக்கள் பணியாற்றி வருகின்றனர். அதேநேரம் 1.3 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் இமயமலை சிகரங்களில் உள்ளனர். அவர்கள் தங்கள் இராணுவ சேவைக்காக இந்தியாவிடம் இருந்து முழு ஓய்வுதியத்தை தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.

இந்திய இராணுவத்தில் உள்ள நேபாள கூர்க்காக்களின் சம்பளம் மற்றும் ஓய்வுதியம் மட்டும் இமயமலை சிகரத்தின் இராணுவ பட்ஜெட்டின் வருடாந்திர பட்ஜெட்டை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. நேபாள இராணுவத்திற்கான வெடிமருந்து ஒப்பந்தம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது.

இந்த தோட்டாக்கள் ஆந்திராவில் உள்ள SSS டிபென்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. உலகின் இரண்டாவது பெரிய இராணுவ வெடிமருந்து உற்பத்தியாளரான பிரேசிலின் CBC டிபென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து SSS டிபென்ஸ் நிறுவனம் தோட்டாக்களை தயாரித்து வருகிறது.

SSS டிபென்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், நேபாள் இராணுவம் எங்கள் நிறுவனங்களின் ஏலங்களை கேட்டு எங்களுக்கு கடிதம் எழுதியது. அதேநேரம் சீன நிறுவங்களுக்கும் ஏலங்கள் கேட்டு கடிதம் எழுதப்பட்டது. இறுதியில் SSS டிபென்ஸ் நிறுவனத்தை நேபாள் இராணுவம் தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளில் நேபாள் இராணுவம் இந்திய ஆயுத அமைப்பையோ அல்லது வெடிமருந்துகளையோ வாங்கவில்லை. சீன நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு நேபாள் இராணுவம் SSS டிபென்ஸ் நிறுவனத்திடம் 2 மில்லியன் தோட்டாக்களை வாங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.