சீன யுவானை பயன்படுத்தி ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்த இந்திய நிறுவனம்..!

இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமென்ட், சீன நாணயமான யுவானை பயன்படுத்தி ரஷ்ய நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்ட்ராடெக் நிறுவனம் ரஷ்ய உற்பத்தியாளரான SUEK விடம் இருந்து 1,57,000 டன் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இந்த நிலக்கரி ரஷ்யாவின் கிழக்கு துறைமுகமான வனினோவில் இருந்து MV மங்காஸ் என்ற சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி 172,652,900 யுவான் என மதிப்பிடப்பட்ட ஜூன் 5 ஆம் தேதியிட்ட விலைபட்டியல் வெளியாகியுள்ளது.

டாலரில் மதிப்பிட்டால் இதன் மதிப்பு 25.81 மில்லியன் டாலர் ஆகும். இந்த சரக்குகளின் விற்பனை SUEK வின் துபாயை தளமாக கொண்ட பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நிறுவனங்களும் யுவானை பயன்படுத்தி ரஷ்ய நிலக்கரிக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன.

சிங்கப்பூரை சேர்ந்த நாணய வர்த்தகர் ஒருவர் கூறுகையில், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கது, எனது தொழில் வாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய நிறுவனமும் சர்வதேச வர்த்தகத்திற்காக யுவானில் செலுத்தியதை நான் கேள்விப்பட்டதே இல்லை என தெரிவித்துள்ளார்.

அல்ட்ராடெக் நிறுவனத்திற்கான கடன் கடிதத்தை எந்த வங்கி வழங்கியது மற்றும் SUEK உடனான பரிவர்த்தனை எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்த கருத்துக்கு SUEK பதிலளிக்கவில்லை. Refinitiv Eikon இன் கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, MV மங்காஸ் சரக்கு கப்பல் தற்போது குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளது.

ரஷ்யா உடனான வர்த்தகத்திற்கு ரூபாய் செலுத்தும் முறை குறித்து இந்தியா ஆராய்ந்தது. ஆனால் அது நிலைவேறவில்லை. ஆனால் சீனா பல ஆண்டுகளாக ரஷ்யா உடனான வர்த்தகத்திற்கு யுவானை பயன்படுத்தி வருகிறது. யுவானை பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகர்கள் அதனை, கடன் வழங்குபவர்கள் மூலமாக சீனா அல்லது ஹாங்காங்கில் உள்ள கிளைகளுக்கு டாலர்களை அனுப்ப வேண்டும்.

Also Read: பொருளாதார நெருக்கடி: சீனாவிடம் இருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான்..!

அல்லது அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள சீன வங்கிகளுக்கு யுவானுக்கு ஈடான வர்த்தகத்தை தீர்த்து கொள்ள வேண்டும் என இந்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நிதி அமைச்சகத்தின் முன்னாள் பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில், ரூபாய்-யுவான்-ரூபிள் பாதை சாதகமானதாக மாறினால், வணிகங்கள் மாறுவதற்கு எல்லா காரணங்களும் ஊக்கமும் உள்ளன. இது இன்னும் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்த இந்தியா..?

சீனா மற்றும் இந்தியா இடையே நடைபெறும் இருதரப்பு வர்த்தகம் பெரும்பாலும் டாலரிலேயே நடைபெறுகிறது. சீனாவை தவிர மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கு யுவானை பயன்படுத்துவது இப்போது வரை அரிதாகவே இருந்தது. ஆனால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: உலகளாவிய $500 B செமிகண்டக்டர் சந்தையில் இந்தியா $85 B வாய்ப்பை கொண்டுள்ளது: IESA

Leave a Reply

Your email address will not be published.