இந்திய இராணுவம் சீனாவிடம் இருந்து 13 மலைத்தொடர்களை கைப்பற்றியதை மீண்டும் உறுதிபடுத்திய புதிய சாட்டிலைட் புகைப்படங்கள்

உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக பாங்காங் த்சோ, ஸ்பாங்கூர் த்சோ பகுதியில் இந்திய வீரர்கள் இருப்பதை புதிய செயற்கைக்கோள் படங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்தியாவின் சிறப்பு எல்லைப் படை (SFF) பிரிவான விகாஸ் பட்டாலியன், பாங்காங் திசோவில் 13 முக்கியமான உயரங்களையும், மலைப்பாதைகளையும் ஆக்கிரமித்ததன் மூலம் சீன இராணுவத்தை வெளியேற்றியது.

SFF என்பது திபெத்திய அகதிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் படையாகும், இது 1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் பங்காங் ட்சோ மற்றும் ஸ்பான்கூர் ட்சோவில் இந்திய விரர்கள் 13 முக்கியமான மலைகளை சீனாவிடம் இருந்து ஆக்கிரமித்ததை புதிய வரைப்படம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படங்களை OSINT ஆய்வாளர் “D-atis” பகிர்ந்துள்ளார்.

சீனாவும் இந்திய நிலையில் இருந்து சில மீட்டர் தொலைவில் துருப்புக்களை நிறுத்தியுள்ளது. இப்போது சீன ஆக்கிரமிப்பில் இருந்த 13 மலைதொடர்களும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனையடுத்து டிசம்பர் 13 அன்று சீன இராணுவத்தின் மேற்கு கமாண்டோ படைக்கு புதிய ஜெனரலை நியமித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

One thought on “இந்திய இராணுவம் சீனாவிடம் இருந்து 13 மலைத்தொடர்களை கைப்பற்றியதை மீண்டும் உறுதிபடுத்திய புதிய சாட்டிலைட் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *