சீனாவுக்கு போட்டியாக சூர்யகிரண் விமானத்தை ஆளில்லா ட்ரோனாக மாற்ற உள்ள இந்திய இராணுவம்..?
கடந்த வருடம் சீனா உடனான மோதலை அடுத்து இந்திய இராணுவம் ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்காவின் ட்ரோன்களை வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்காவிடம் இருந்து MQ-9 ரீப்பர் 30 தாக்குதல் ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு தலா 10 என்ற வீதம் 30 ட்ரோன்களை இந்தியா வாங்க உள்ளது. மேலும் அடுத்த 10 வருடத்தில் இந்தியாவிற்கு 5,000 ட்ரோன்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 2,500 ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு வேலைக்கும் மற்ற 2,500 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ட்ரோன்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கினால் பல மில்லியன் டாலர் செலவாகும். அதேபோல் உள்நாட்டில் தயாரித்தாலும் பல வருடங்களுக்கு பிறகே இராணுவத்திற்கு கிடைக்கும்.
இதனால் இந்தியாவின் சூர்யகிரண் விமானங்களை ஆளில்லா ட்ரோன்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் அமெரிக்காவும் தனது பழைய F-16 விமானங்களை ஆளில்லா தாக்குதல் ட்ரோனாக மாற்றியுள்ளது. 1980 ஆம் ஆண்டுகளிலேயே ருஸ்டம் டமானியா என்பரால் இந்தியாவில் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதன் பிறகு திட்டம் தாமதமானது. இதனை அடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு ருஸ்டம்-1 ட்ரோன் சோதனை செய்யப்பட்டது.
ஆனால் அது முதல் முயற்சிலேயே தோல்வியை தழுவின. அதன் பின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனையில் ருஸ்டம்-1 வானில் வெற்றிகரமாக பறந்தது. தற்போது இந்தியா ருஸ்டம்-1, ருஸ்டம்-H மற்றும் ருஸ்டம்-2 ஆகிய மூன்று வகை ட்ரோன்களை தயாரித்துள்ளது.
இருப்பினும் 5,000 ட்ரோன்கள் தயாரிக்க கால தாமதம் ஆகும் என்பதால் இந்தியாவின் பழைய விமானங்களான சூர்யகிரண் விமானங்களை ஆளில்லா தாக்குதல் ட்ரோனாக மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த சூர்ய கிரண் MK-II விமானமானது 1976 ஆம் ஆண்டு HAL நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தால் கிரண் விமானத்தை தொடர்ந்து ரஷ்ய தயாரிப்பான Mig-21 மற்றும் Mig-29 விமானங்களையும் ஆளில்லா தாக்குதல் ட்ரோனாக மாற்றம் செய்யப்படும் என DRDO அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.
Also Read: ரஷ்ய அதிபர் புதின் வருகையின் போது S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பு கையெழுத்தாக வாய்ப்பு..?
அதேநேரம் சீனா CH-5 என்ற ஆளில்லா ட்ரோன்களை தயாரித்து மலிவான விலையில் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்க ட்ரோன் அமெரிக்காவின் ரீப்பரை விட CH-5 சிறந்தது என சீனா கூறுகிறது. மேலும் சீனா EA-03 Soaring Dragon என்ற மற்றொரு ட்ரோனையும் தயாரித்துள்ளது. இது ட்ர்போஜெட் இன்சின் உந்துவிசையுடன் 2,000 கிலோ மீட்டர் வரம்பை கொண்டுள்ளது.
மேலும் BZK-005 என்ற ஆளில்லா ட்ரோன்களை சீன கடற்படை பயன்படுத்தி வருகிறது. சீனாவின் முப்படைகளும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவும் “Project Cheetah” என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 5,000 கோடி செலவில் இஸ்ரேல் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Also Read: திபெத் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துவரும் சீனா.. சாட்டிலைட் புகைப்படம் வெளியானது.
Also Read: சோதனைக்கு தயாராகும் இந்தியாவின் புதிய தேஜஸ் MK-2 போர் விமானம்..
I like all update news