1000 கோடி மதிப்பில் எதிரி இலக்கை கண்டறியும் ஸ்வாதி ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்..?

இந்திய இராணுவம் சீன எல்லையை கட்டுப்படுத்த எதிரிகளின் இலக்குகளை கண்டறியும் ஸ்வாதி ஏவுகணையை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய இராணுவம் பாதுகாப்பு அமைச்சக்திடம் முன்மொழிவை வைத்துள்ள நிலையில், இந்த திட்டம் உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

DRDO ஆல் வடிவமைக்கப்பட்டு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்வாதி ரேடார்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எதிரிகளின் இலக்குகளை கண்டறிய இந்திய இராணுவம் 12 ஸ்வாதி ரேடார்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்வாதி ரேடார்களை ஆர்மீனியாவும் வாங்கியுள்ளது.

ஆயுதங்களை கண்டறியும் ஸ்வாதி ரேடார்கள் 50 கிலோமீட்டர் எல்லைக்குள் மோர்டார்ஸ், ஷெல்கள் மற்றும் ராக்கெட்டுகள் போன்ற எதிரி ஆயுதங்களின் இடத்தை வீரர்கள் கண்டறிய உதவுகிறது. ஸ்வாதி ரேடார்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஆயுதங்களில் இருந்து ஏவப்படும் பல இலக்குகளை ஒரே நேரத்தில் கண்டறிய முடியும்.

பீரங்கி போன்ற எதிரிகளின் இலக்குகளை கண்டறிவதன் மூலம் அவற்றை எளிதாக அழிக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்மு காஷ்மிரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய இராணுவம் ஸ்வாதி ரேடார்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சீன எல்லையிலும் பயன்படுத்த அதனை வாங்க இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.

Also Read: டீஸ்டா நதி திட்டதிற்காக சீனாவிடம் 1B டாலர் கடன் கேட்கும் பங்களாதேஷ்..?

இந்திய இராணுவம் சீன எல்லையில் நிறுத்த 12 ஸ்வாதி ரேடார்களை 1000 கோடி மதிப்பில் வாங்க உள்ளது. இந்த ஸ்வாதி ரேடார் அமைப்பு 2018 ஆம் ஆண்டு சோதனைக்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே இந்திய தயாரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதால் விரைவில் ஒப்புதல் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read: ஜம்முவின் செனாப் ஆற்றில் நீர்மின்நிலைய கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு..

Leave a Reply

Your email address will not be published.