பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய படையினரை குறிவைத்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய படையினரும் தக்க் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பனி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 18-ம் தேதி இந்திய பாதுகாப்பு படைவீரர் நிஷாந்த் சர்மா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பாதுகாப்பு படைவீரர் நிஷாந்த் சர்மா இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் நிஷாந்த் சர்மா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிஷாந்த் சர்மா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *