எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய இராணுவம்..
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கெரான் செக்டாரில் ஜனவரி 1 அன்று எல்லை தாண்ட முயன்ற பாகிஸ்தான் இராணுவ வீரரை இந்திய இராணுவம் சுட்டுத்தள்ளியது. பாகிஸ்தான் இராணுவத்தின் எல்லை நடவடிக்கை குழு (BAT) மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய இராணுவம் ஞாயிற்றுகிழமை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழு ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற குழுக்களை உள்ளடக்கியது. இவர்கள் எல்லை கட்டுப்பாட்டை ஒட்டிய பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்துவார்கள். இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு அன்று எல்லையில் ஊடுருவல் தடுப்பு அமைப்பு வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதி ஊடுருவியுள்ளான்.
அப்போது பதானி சூட் மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்து ஏகே 47 துப்பாக்கியுடன் பாகிஸ்தான் பயங்கரவாதி ஊடுருவலை பார்த்த இந்திய இராணுவம் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது. பயங்கரவாதியின் உடைமைகளை சோதனை செய்ததில் பாகிஸ்தானின் அடையாள அட்டை, பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் இருந்தது.
மேலும் அவனிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி, ஏழு கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவன் இராணுவ சீருடையில் இந்தியாவுக்குள் ஊடுருவி இருந்தான். பயங்கரவாதி முகமது ஷபீர் மாலிக் என அடையாளம் காணப்பட்டது. கொல்லப்பட்டவனின் உடலை எடுத்து செல்லுமாறு பாகிஸ்தான் இராணுவத்துக்கு ஹாட்லைன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Also Read: 2019 புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியை போட்டுதள்ளிய இந்திய இராணுவம்..?
BSF IG ராஜா பாபு சிங் கூறுகையில், குளிர் காலம் என்பதால் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம். சர்வதேச எல்லைகள் மற்றும் LoCயை பாதுகாக்கும் பொறுப்பில் இந்திய இராணுவம் மற்றும் BSF வீரர்கள் தீவீர கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது.
Also Read: காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 4 வீரர்கள் காயம்…