ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவனை சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். அந்த பயங்கரவாதி பாகிஸ்தான் அனுப்பிய அபு ஜரார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 11 மற்றும் 14 ஆம் தேதிகளில் பூஞ்ச் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையேயான மோதலின் போது 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அப்போது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய குழுவில் அபு ஜராரும் இருந்ததாக கூறப்படுகிறது.

அபி ஜரார் இந்தியாவில் பயங்கரவாதத்தை புதுபிக்க ஆட்களை சேர்க்க அனுப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவன் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக இருந்ததால் ஜம்மு காஷ்மீர் போலிசாருக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் இவனிடம் இருந்து AK 47 துப்பாக்கி, 4 மகசின்கள், கையெறி குண்டுகள் மற்றும் இந்திய ரூபாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை பெஹ்ராம்கலா பகுதியில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ராணுவம் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இராணுவத்தினரை பார்த்ததும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதிலுக்கு இராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

Also Read: உயிரியல் போருக்கு தயாராக வேண்டும்.. BIMSTEC மாநாட்டில் பிபின் ராவத் எச்சரிக்கை..

இதில் தப்பி ஓட முயன்ற போது அபு ஜரார் கொல்லப்பட்டான். மற்றொரு பயங்கரவாதி தப்பி ஓடிவிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதேபோல் சமீபத்தில் ஹாஜி ஆரிப் என்ற முக்கிய பயங்கரவாதியும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். நேற்று போலிஸ் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் கொல்லப்பட்டுள்ளான்.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் SMART அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

இந்த அபு ஜரார் மற்றும் அவனது கூட்டாளியும் கடந்த சில மாதங்களாகவே அடந்த காட்டுப்பகுதியில் தங்கி உள்ளனர். உணவு, உடை மற்றும் தகவல் தொடர்புக்காக மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த போது கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் அபி ஜரார் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.

Also Read: உலகின் முதல் 100 ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்த 3 இந்திய நிறுவனங்கள்..

Leave a Reply

Your email address will not be published.