இந்தியா வந்தது 6,000 துப்பாக்கிகள்? இஸ்ரேலிடம் இருந்து 16,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம்

இஸ்ரேலிடம் இருந்து இந்திய ராணுவத்திற்கு 6,000 புதிய இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.


கடந்த ஆண்டு அவசர தேவையின் கீழ் ஆர்டர் செய்யப்பட்ட 16,000 இலகு ரக இயந்திரத் துப்பாக்கிகளில் 6,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை(Negev LMG) இந்திய இராணுவம் இந்த மாதம் முதல் முறையாகப் பெற்றது.

இந்த மாத தொடக்கத்தில் துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாகவும், அவை ஆய்வுகளுக்கு உட்படுத்த பட்டதாகவும் இந்தியா டுடே தகவல்கள் கூறுகின்றன.

மீதமுள்ள துப்பாக்கிகள் மார்ச் மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுதப்படைகளுக்கு அதிநவீன இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் (Negev LMG), நீண்ட கால கோரிக்கைக்கு பின் 2019 மார்ச் மாதம் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கையகப்படுத்தல் பிரிவு, இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலைகளுடன், 880 கோடி ரூபாய் செலவில், 16,479 எல்.எம்.ஜி., களை கொள்முதல் செய்வதற்கான, மூலதன கையகப்படுத்தல் ஒப்பந்தத்தில் மார்ச் 2020ல் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு 40,000 எல்.எம்.ஜி.க்கள் தேவை. சீனாவுடனான தொடர்ச்சியான மோதல் மற்றும் பாகிஸ்தான் உடனான மோதல்களால் புதிய எல்எம்ஜிக்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இது ராணுவத்தின் திறனை மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Negev 7.62X51 mm லைட் மெஷின் துப்பாக்கி ஒரு போரில் பயன்படுத்தக் கூடிய நிரூபிக்கப்பட்ட ஆயுதம் மற்றும் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

அவசர தேவைகளுக்கும், முக்கியமான நடவடிக்கைகளுக்கும் இந்த ஆயுதம் தேவை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இது முன்னணித் துருப்புக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மிகவும் தேவையான போர் சக்தியை வழங்கும் என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *