இஸ்ரேலிடம் இருந்து 2 புதிய ஹெரான் TP ட்ரோன்களை வாங்கிய இந்திய இராணுவம்..

இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலிடம் இருந்து 4 புதிய ஹெரான் TP ட்ரோன்களில் இரண்டை இந்திய இராணுவம் பெற்றுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு சீனா உடனான மோதலின் போது இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த ட்ரோன்கள் வாங்கப்பட்டன.

இந்த புதிய ட்ரோன்கள் மார்ச் மாதத்தில் பெறப்பட்டன. இவை இரண்டும் கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக கிழக்கு லடாக்கில் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற இரண்டு ட்ரோன்களும் வடகிழக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முதலில் 4 நடுத்தர உயர நீண்ட சகிப்புத்தன்மை ட்ரோன்களை (MALE) வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. நீண்ட கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக மேம்பட்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றம் சென்சார்களுடன் அனைத்து MALE ட்ரோன்களையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து 30 HQ-9B ஹை ஆல்டியூட் லாங் எண்டூரன்ஸ் (HALE) ஆயுதமேந்திய ட்ரோன்களை ஒவ்வொரு பாதுகாப்பு துறைக்கும் 10 என்ற வீதம் மொத்தம் 30 ட்ரான்களை 3 பில்லியன் டாலர் செலவில் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்திய கடற்படை, கப்பலில் இருந்து செல்லும் 40 ட்ரோன்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோரிக்கையை வெளியிட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து 2 பிரிடேட்டர் ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்தது.

ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌதாரி கூறுகையில், இந்திய விமானப்படை பல வகையான UAV களை வாங்குவது மற்றும் தற்போதுள்ள UAV களை ஆயுதமாக்குவது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம் மற்றும இந்தியாவின் ஆல்பா டிசைன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்படும் 100க்கும் மேற்பட்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் ட்ரோன்கள், ஸ்கைஸ்ட்ரைக்கர் வாங்க இராணுவம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published.