அருணாச்சலில் சீன எல்லையோரம் புதிய சாலை அமைத்து வரும் இந்திய இராணுவம்..

அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் BRO சாலைகளை உருவாக்கி வருகிறது. தொலைதூரங்களையும் இணைக்கும் வகையில் இந்த சாலைகள் இருக்கும். எல்லையை நமது வீரர்கள் விரைவாக அடைய இந்த சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் துருப்புகளை விரைவாக எல்லைக்கு கொண்டு செல்லும் வகையில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் அருணாச்சலின் உட்கட்டமைப்பை வலுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.

BRO(Border Roads Organisation) தற்போது அருணாச்சல் பிரதேசத்தில் சர்லி முதல் செமை வரை 54 கிலோ மீட்டரும், தப முதல் கரு வரை 43 கிலோ மீட்டர் தூரமும், நாச்சோ முதல் பாங்டே வரை 41 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் சார்லி முதல் புல்லே வரை 34 கிலோ மீட்டர் தூரத்திற்கும், ஹூரி முதல் தபா வரை 20 கிலோ மீட்டருக்கும், தப் முதல் கோயிங் வரை 18 கிலோ மீட்டருக்கும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை BRO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சாலைகள் மூலம் துருப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டும் அல்லாமல் பொருளாதார வழித்தடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலைபணிகளை உயர் இராணுவ அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சுமோ மற்றும் ஜீப் போன்ற வாகனங்களும் சென்று வரும் வகையில் எல்லையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் சீனாவுடன் பிரச்சனை ஏற்படும் போது எளிதில் எல்லையை அடைய இந்த சாலைகள் உதவும்.

Leave a Reply

Your email address will not be published.