பாரமுல்லாவில் 2 JeM பயங்கரவாதிகளை கைது செய்தது இந்திய இராணுவம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் இன்று அதிகாலை கைது செய்துள்ளது. அப்பகுதியில் மேலும் சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரமுல்லா போலிஸ், 29 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில், ஹன்சிவியூரா பாலா பட்டன் பாரமுல்லா சாலையில் நடமாடும் வாகன சோதனை சாவடி நிறுவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஹன்சிவியூரா பட்டானில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பயங்கரவாதிகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சோதனையில் அக்கிப் முகமது மிர்(27) மற்றும் டேனிஷ் அஹ் தார்(25) ஆகிய இரண்டு ஜெய்ஷ்-இ-பயங்கரவாதிகளை இராணுவம் கைது செய்தது.

Also Read: தமிழக மாவோயிஸ்ட் உட்பட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது NIA..

அவர்களிடம் இருந்து இரண்டு சீன கைத்துப்பாக்கிகள், மேலும் இரண்டு கைத்துப்பாக்கிகள், சீன கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் அப்பகுதியில் வேறு பயங்கரவாதிகள் யாரேனும் உள்ளனரா என இந்திய இராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

Also Read: இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள்.. முதல் 3 இடத்திற்குள் இந்தியா..

Leave a Reply

Your email address will not be published.