1.3 லட்சம் கோடி மதிப்பில் 114 போர் விமானங்களை வாங்க உள்ள இந்திய விமானப்படை

114 போர் விமானங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மிக்-21 ரக போர் விமானங்களின் 4 ஸ்குவாட்ரன்களுக்கு பதிலாக 83 எல்சிஏ தேஜஸ் போர் விமானங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

வரவிருக்கும் ஏரோ இந்தியாவில் 83 எல்சிஏ தேஜாஸ் மார்க் 1ஏ விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், இந்திய விமானப்படை தற்போது 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 114 போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இப்போது 83 LCA மார்க் 1A போர் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் ஏரோ இந்தியா சமயத்தில் பெங்களூருவில் 50,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

83 எல்சிஏ தேஜஸ் ரக போர் விமானங்கள் விரைவில் மிக்-21 ரக போர் விமானங்களின் 4 ஸ்குவாட்ரன்களை மாற்ற உள்ளது.

இந்திய விமானப்படை ஏற்கனவே இந்த ஒப்பந்தப்புள்ளிக்கான தகவல் கோரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், பல பில்லியன் டாலர் செலவில் 4.5 ஆம் தலைமுறை விமானங்களை பெற கூடிய வகையில், கடந்த ஆண்டு முதல் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த டெண்டரில் அமெரிக்க, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் தங்களின் போர் ஜெட் விமானங்கள் பற்றிய தகவலை அளித்துள்ளனர். அமெரிக்கா எப்-15 ஸ்ட்ரைக் ஈகிள், எஃப்-18 சூப்பர் ஹார்னெட், எப்-21 மற்றும் எப்-16 ரக போர் விமானங்களுடனும், ரஷ்யா தனது MiG-35 மற்றும் சுகோய் போர் விமானங்களுடனும், ஸ்வீடனின் சாப் தனது கிரிபென் போர் விமானத்துடனும், பிரான்ஸ் ரபேல் போர் விமானங்களுடனும் இந்த டெண்டரில் பங்கேற்க உள்ளன.

சமீபத்தில் விமானப்படைத் தலைவர் AKS படாவுரியா 114 போர் விமானங்களை கையகப்படுத்தும் திட்டத்தின் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக ரபேல் உள்ளது என கூறியிருந்தார். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட, விமானத்தின் திறன்கள், எந்த விலையில் வழங்கப்படுகிறது என்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படையால் எந்த விமானம் தேர்வு செய்யப்பட்டாலும், அது அடுத்த நான்கு தசாப்தங்களுக்கு இந்த படையின் முக்கிய பகுதியாக இருக்கும். 272 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ள நிலையில், அவற்றில் 114 விமானங்கள் மேட் இன் இந்தியாவாக(Made in India) இருக்கும், மேலும் அட்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு வலுவான உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறையை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

போர் விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் அண்டை நாடுகளை விட பின்தங்கி உள்ள நிலையில், இந்திய விமானப்படை கடந்த நான்கு ஆண்டுகளில் 119 விமானங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. 2016 செப்டம்பரில் 36 ரஃபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் 83 எல்சிஏ மார்க் 1ஏ தேஜஸ் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *