மிராஜ் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் விமானப்படையுடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம்.. புதிதாக 350 போர் விமானங்கள்..

இந்திய விமானப்படை பிரான்சின் மிராஜ் ஏர் ஃப்ரேம்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்திய விமானப்படையை நவீனப்படுத்த முடியும் என விமானப்படை கூறியுள்ளது.

1980 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட மிராஜ்-2000 விமானம் சில மாதத்திற்கு முன் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. இதனை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து மிராஜ் ஏர் ஃப்ரேம்களை வாங்க இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது இரண்டாவது ஒப்பந்தமாகும்.

பிரான்ஸ் விமானப்படையில் ஓய்வு அளிக்கப்பட்ட விமானங்களை வாங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த விமானங்களை வாங்கி நேரடியாக இந்திய விமானப்படையில் இணைக்க போவது இல்லை. அதனை இந்திய விமானப்படையில் ஏற்கனவே உள்ள மிராஜ் விமானப்படையை பராமரிப்பதில் பலன் அளிக்கும் என கூறப்படுகிறது.

பிரான்ஸ் விமானப்படை அதன் மிராஜ் விமானத்திற்கு பதிலாக ரபேல் போர் விமானங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அந்த பழைய மிராஜ் விமானங்களின் ஏர் ஃப்ரேம்களை இந்திய விமானப்படைக்கு பயன்படுத்தி கொள்ள பிரான்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Also Read : அவசர காலத்தில் தரையிறங்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் புதிதாக ஓடுபாதைகள்..

மிராஜ்-2000 விமானம் இந்திய விமானப்படையில் தவிர்க்க முடியாத விமானம் ஆகும். இந்த விமானத்தின் மூலமாக தான் பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது ஸ்பைஸ் 2000 குண்டுகளை வீசியது. மேலும் இந்திய விமானப்படைக்கு புதிதாக 350 போர் விமானங்கள் வாங்கப்படும் என இந்திய விமானப்படை தளபதி RKS பதாரியா கடந்த வாரம் தெரிவித்தார்.

அவை ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் ஆகும். அந்த விமானம் தேஜஸ் MK2 போர் விமானம் என கூறப்படுகிறது. மேலும் ஜம்மு காஷ்மீரில் புதிதாக 5 ஓடுபாதையை இந்திய விமானப்படை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: அருணாச்சலில் சீன எல்லையோரம் புதிய சாலை அமைத்து வரும் இந்திய இராணுவம்..

Leave a Reply

Your email address will not be published.