இன்டர்போலின் ஆசியாவிற்கான பிரதிநிதி தேர்தலில் இந்தியா வெற்றி.. சீனாவிற்கு எதிர்ப்பு..
சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் செயற்குழுவில் (Interpol) ஆசியாவிற்கான பிரதிநிதியாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்டர்போலின் உலகளாவிய குற்றங்களை தடுக்கும் அமைப்பில் இரண்டு பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.
இதில் இந்தியா, சீனா, சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் ஜோர்டான் ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் போட்டியிட்டனர். இறுதியில் இந்த பதவிக்கு இந்தியாவும் சீனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியா சார்பில் 1988 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான பிரவின் சின்ஹா நிறுத்தப்பட்டார்.
இவர் தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனராக பணியாற்றி வருகிறார். சீனாவின் சார்பில் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புத்துறையின் துணை இயக்குனர் ஹூ பின்சென் நிறுத்தப்பட்டார். இருவரும் இந்த இன்டர்போல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இன்டர்போலுக்கான தேர்தல் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்து வருகிறது. ஆசியாவிற்கான பிரதிநிதி பதவியில் பிரவின் சின்ஹா மூன்று ஆண்டு நீடிப்பார். இன்டர்போலின் நிர்வாக குழுவானது, பொதுச்சபையின் முடிவுகள், தலைமை செயலகத்தின் நிர்வாகம் மற்றும் பணிகளை கண்காணிக்கும் குழுவாகும்.
இன்டர்போல் என்பது 195 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரசுகளுக்கு இடையேயான அமைப்பாகும். இதன் முக்கிய பணியானது எந்தவொரு நாட்டாலும் தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களை பகிர்வது ஆகும்.
இந்தியாவின் இந்த பதவிக்காக பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கோரப்பட்டது. பிரவின் சின்ஹா சிபிஐயில் போலிஸ் சுப்பிரண்டு, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், இணை இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் கூடுதல் சுயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
Also Read: சீனாவை தாக்கிய குட்டி யானை.. இந்தியா தான் காரணம் என சீனா கதறல்..
மேலும் உச்ச, உயர்நீதிமன்றங்களால் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு வங்கி மோசடிகள், நிதிகுற்றங்கள் மற்றும் குண்டு வெடிப்புகள் ஆகிய வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர். மேலும் மனித உரிமை குழுக்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் சீனாவின் ஹூ பின்சென் மற்றும் ஐக்கிய அமீரகத்தின் அகமது நாசர் ஆகியோரின் வேட்பு மனுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். அந்த இரு நாடுகளிலும் மனித உரிமை அத்துமீறல் நடப்பதாக குற்றம் சாட்டினர். எனவே இருவரின் வேட்பு மனுவையும் நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read: நாட்டை நடத்துவதற்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.. மாநாட்டில் குமுறிய இம்ரான்கான்..
Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?