இலகுரக போர் விமானம், ஹெலிகாப்டருக்கான உற்பத்தி ஆலையை எகிப்தில் அமைக்க உள்ள இந்தியா..?

மத்திய கிழக்கு மற்றும் வடஆப்ரிக்க நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் தொடர்வதால், எகிப்தில் இலகுரக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி வசதிகளை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதற்காக எகிப்துடன் தொடர்ச்சியான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எகிப்து விமானப்படை தலைவர் இன்னும் சில நாட்களில் இந்தியாவுக்கு வர உள்ளார். அப்போது இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பற்றி விளக்கப்படும்.

ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சௌதாரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எகிப்து சென்று கெய்ரோவில் நடந்த வான் சக்தி கருத்தரங்கு மற்றம் பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொண்டார். மேலும் தற்போது கெய்ரோவில் உள்ள விமானப்படை பள்ளியில் தந்திரரோபாய தலைமைத்துவ திட்டத்தில் பங்கேற்பதற்காக 57 பேர் கொண்ட இந்திய விமானப்படை பிரதிநிதிகள் குழு எகிப்து சென்றுள்ளது.

இந்த குழுவில் மூன்று Su30 MKI மற்றும் இரண்டு C17 விமானங்கள் உள்ளன. உள்ளுர் உற்பத்தி மற்றும் தொழிற்நுட்ப பரிமாற்றத்தை மையமாக கொண்டு எகிப்து விமானப்படைக்கு 70 இலகுரக போர் ஜெட் விமானங்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது எகிப்து விமானப்படை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய போர் விமானங்களை கொண்டு விமான மற்றும் கடற்படையை இயக்கி வருகிறது.

இந்த நிலையில் போர் விமான உற்பத்தி வசதியை அமைப்பதில் ஆர்வமாக உள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் LCA Mk1A தவிர, அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ALH) மற்றும் இலகுரக போர் ஹெலிகாப்டரும் (LCH) போன்ற உள்நாட்டு போர் ஹெலிகாப்டரையும் தயாரித்து வருகிறது. இதனால் இதன் உற்பத்தி தளத்தை எகிப்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிலையான விங் தேவையாக இருந்தாலும் சரி அல்லது ரோட்டரி விங் தேவையாக இருந்தாலும் சரி, இந்தியா அங்கு உற்பத்தி வசதிகளை கூட்டாக அமைக்க முன்வந்துள்ளது. இத்தகைய விமானங்களுக்கு அந்த பிராந்தியத்தில் கணிசமான தேவை இருப்பதால், எகிப்து ஒரு நல்ல தளமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தேஜஸ் LCA Mk1A வகை 83 போர் விமானங்களுக்கு இந்திய விமானப்படை ஆர்டர் வழங்கிய பிறகு, பொருளாதாரத்தின் அளவை கருத்தில் கொண்டு இந்திய தேஜஸ் LCA விலை ஒரு யூனிட்டுக்கு சுமார் 42 மில்லியன் டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக போர் விமானங்களின் மலேசிய தேவைக்கான ஆர்டரில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இது தவிர தேஜஸ் போர் விமானங்களை வாங்கும் பட்சத்தில் மலேசிய விமானப்படையில் உள்ள ரஷ்ய போர் விமானமான Su 70 போர் விமானங்களுக்கான பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published.