உலகின் மிகப்பெரிய கடற்போர் பயிற்சியில் பங்கேற்க உள்ள இந்தியா..?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டத்திற்கு பிறகு அமெரிக்கா நடத்தும் உலகின் மிகப்பெரிய கடல் போர் பயிற்சியான ரிம் ஆஃப் தி பசிபிக் அல்லது RIMPAC ல் கலந்து கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனா தனது இருப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில், சீனாவை கட்டுக்குள் வைக்க கடந்த மாதம் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த குவாட் மாநாட்டில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இந்த மாதம் நடைபெற உள்ள கடற்போர் பயிற்சியில் இந்தியா பங்கேற்க உள்ளது. அமெரிக்கா நடத்தும் இந்த கடற்பயிற்சி ஹவாய் தீவுகள் மற்றும் தெற்கு கலிபோர்னியாவை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. ஜுன் 29 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ள 28வது கடற்போர் பயிற்சியில் இந்தியா உட்பட 26 நாடுகள் பங்கேற்கின்றன.

அமெரிக்க கடற்படையின் 3வது கடற்படையின் அறிக்கையின்படி, குறைந்தது 38 போர்கப்பல்கள், 4 நீர்மூழ்கி கப்பல்கள், 170 போர் விமானங்கள் மற்றும் 25,000 வீரர்கள் இந்த போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த கடற்போர் பயிற்சியில் நீர்நிலை செயல்பாடுகள், துப்பாக்கிச்சூடு, ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு, வான் பாதுகாப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள், கண்ணிவெடி அகற்றுதல், வெடிகுண்டை அகற்றுதல் மற்றும் டைவிங் மற்றும் மீட்பு நடவடிகைகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

இந்த கடல் போர் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர்,கனடா, சிலி, கொலம்பியா, டென்மார்க், ஈக்வடார், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பெரு, தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, டோங்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

Also Read: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்.. 8 பாக். வீரர்கள் உயிரிழப்பு..

இந்த RIMPAC, 1971 ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் வருடாந்திர போர் பயிற்சியாக தொடங்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு இந்த RIMPAC கடற்போர் பயிற்சியில் பங்கேற்றது.

Also Read: டேங்க் கொலையாளியான TB2 ட்ரோனை தனது விமானத்தளத்தில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான்..

2014 ஆம் ஆண்டு பங்கேற்ற போர் பயிற்சியில், உள்நாட்டிலேயே கட்டப்பட்ட சிவாலிக் கிளாஸ் ஸ்டெல்த் போர் கப்பலான INS சஹ்யாத்ரி போர் பயிற்சியில் பங்கேற்றது. 2016 ஆம் ஆண்டு INS சத்புரா போர் கப்பலும், 2018 ஆம் ஆண்டு மீண்டும் INS சஹ்யாத்ரி போர் கப்பலும் பங்கேற்றது.

Also Read: இந்திய விமானப்படைக்கு புதிதாக 6 எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க உள்ள IAF..

2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் இந்தியா பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள போர் பயிற்சியில் இந்தியா பங்கேற்க உள்ளது. ஆனால் பங்கேற்க உள்ள போர் கப்பல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 2006. 2010 மற்றும் 2012 ல் இந்தியா பார்வையாளராக மட்டுமே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.