மென்பொருள் சேவை துறையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என அறிக்கை..!

வென்ச்சர் கேபிடல் நிறுவனமான சிராடே வென்ச்சர்ஸ் மற்றும் ஜின்னோஸ் ஆலோசனை நிறுவனத்தால் வெளியுடப்பட்ட அறிக்கையின்படி. 2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய மென்பொருள் சேவை (SaaS) துறையில் 100 பில்லயன் டாலர் வருவாய் கிடைக்கும் என ஏப்ரல் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு இந்த துறையில் மூதலீடு மூன்று மடங்கு அதிகரித்து 4 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் இது 55 சதவீதம் அதிகரித்து 6.5 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்குள் SaaS துறையில் 100 பில்லியன் டாலர் வருவாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய SaaS நாடாக இந்தியா மாறும் ஜின்னோஸ் தலைமை நிர்வாக அதிகாரி நடராஜன் கூறியுள்ளார். அனைத்து SaaS யூனிகார்ன்களில் சுமார் 90 சதவீதம் கடந்த நான்கு ஆண்டுகளில் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்துள்ளதாகவும், தற்போது செயலில் உள்ள 1,150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2021ல் 8 பில்லியன் டாலர் மொத்த வருவாய் ஈட்டுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் இந்தியா சமீபத்தில் SaaS யூனிகார்ன்களின் எண்ணிக்கையில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய SaaS நாடாக மாற இந்தியா தயாராகி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சீனாவின் வலையில் சிக்கிய மற்றொரு நாடு.. ஜப்பான் செல்கிறார் ஜசிந்தா ஆர்டெர்ன்..


ஆதரவான கொள்கைகள், ஏராளமான பணப்புழக்கம், உள்நாட்டு திறமைகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் வழங்கும் வெளியேறும் விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக இத்துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. யுனிஃபோர் போன்ற 35 க்கும் மேற்பட்ட SaaS நிறுவனங்கள் சமீபத்தில் 400 மில்லியன் டாலரை திரட்டியது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 600 மில்லியன் டாலர் திரட்டப்பட்டது.

Also Read: சீனாவின் 3 சூரிய மின்சக்தி திட்டத்தை ரத்து செய்து இந்தியாவிற்கு வழங்கிய இலங்கை..?


மேலும் Pixis, Hevo Data, Healthplix, Cropln, Pando, Deepfence மற்றும் Squadcast ஆகியவற்றின் மதிப்பு 3.5 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கும் முக்கிய வகைகளில் கிளவுட்-நேட்டிவ் மென்பொருள் மேம்பாடு, ஆட்டோமேஷன், கிளவுட் செக்யூரிட்டி, Web3 மற்றும் Verticalised Saas ஆகியவை ஆகும். இவை அனைத்தும் இந்த ஆண்டு உலகளவில் நிதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.