சீனாவுக்கு எதிராக லித்தியம் அயன் பேட்டரி சந்தையில் களமிறங்கும் இந்தியா..

லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க எப்சிலன் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கர்நாடகாவில் தொடங்கியுள்ளார் விக்ரம் ஹண்டா.

லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பில் சீனா முன்னிலையில் உள்ளது. உலகின் 80 சதவீத லித்தியம் அயன் பேட்டரி சந்தையை சீனா தன்வசம் வைத்துள்ளது. தற்போது உலகின் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா தற்போதைய லித்தியம் அயன் பேட்டரியின் சந்தையாக இருந்தாலும் மூலக்கூறு பொருட்களை இந்தியா உட்பட பல நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது விக்ரம் ஹண்டா தனது நிறுவனத்தில் 807 மில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் டன் கிராபைட் அனோடை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூலக்கூறுகளின் மூலம் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க முடியும். இதன் மூலம் உலகின் 10 சதவீத லித்தியம் அயன் பேட்டரி சந்தையை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என ஹண்டால் கூறுகிறார்.

இந்த லித்தியம் பேட்டரிகள் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் கார்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மத்திய அரசும் லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்புக்காக நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும் நிறுவனங்களுக்கு சலுகையையும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *