வியட்நாமின் போர்கப்பல் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக்கு உதவும் இந்தியா..?

போர்கப்பலை கட்டமைப்பதற்கும் அதனை பராமரிப்பதற்கும் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வியட்நாமுக்கு இந்தியா உறுதி அளித்துள்ளது.

இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான நிகழ்ச்சியில், பாதுகாப்பு இணை அமைச்சர் அனுராக் பாஜ்பாய் பேசுகையில், குறைந்த விலையில் மற்றும் தரமான பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வது மற்றும் சுயசார்பு இந்தியா பற்றியும் பேசினார்.

மேலும் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு தொடர்பான உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும் வியட்நாம் கப்பல் கட்டும் தளங்களுடன் இணைந்து தளங்களை பராமரித்தல், பழுதுபார்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த உள்ளதாக அனுராக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வியட்நாம் பாதுகாப்புத்துறையின் தலைவர் டிரான் ஹாங் மின் கலந்து கொண்டார். தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வியட்நாம் இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியது.

சீனாவுடன் எல்லை மற்றும் கடல் பரப்பை பகிர்ந்து கொண்டுள்ள வியட்நாம் சீனாவுடன் மோதல்போக்கு நிலவி வருகிறது. தற்போது வியட்நாம் கடல் பகுதியில் சீன கப்பல்கள் ரோந்து சென்றதால் வியட்நாம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் தான் இந்தியா வியட்நாம் இடையே பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை வாங்க வியட்நாம் ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *