சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள அமெரிக்காவின் MQ-9B தாக்குதல் ட்ரோனை வாங்க உள்ள இந்தியா..

சீனாவுடன் கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்வதற்கு இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 30 ஆயுதம் ஏந்திய ஆளில்லா தாக்குதல் ட்ரோனை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த MQ-9B பிரிட்டேட்டர் ஆளில்லா ட்ரோன் 1,500 கிலோ வரை ஆயதங்களை எடுத்து செல்லக்கூடியது. மேலும் தொடர்ந்து 48 மணி நேரம் பறக்க கூடியது. கடந்த ஆண்டு சீனாவுடன் மோதல் ஏற்பட்ட நிலையில் இந்தியா இரண்டு MQ-9B ட்ரோனா அமெரிக்காவிடம் இருந்து குத்தகைக்கு எடுத்தது.

MQ-9B பிரிட்டேட்டர் ஆளில்லா ட்ரோனை 3 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள ட்ரோன்கள் உளவு மற்றும் கண்காணிப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த மாதம் 12 ஆம் தேதி QUAD நாடுகளுக்கிடையே நடைபெறும் முதல் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுடனான தென் சீன கடல் பகுதியிலும், பாகிஸ்தான் உடனான இமயமலை பகுதியிலும் இந்த ஆளில்லா ட்ரோனை ஈடுபடுத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆளில்லா ட்ரோன் இந்திய படையில் இணையும் போது இந்திய இராணுவத்தின் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *