ரஷ்யாவிடம் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் கூடிய குண்டுவீச்சு போர் விமானங்களை வாங்க உள்ள இந்தியா..?

முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் அருப் ராஹா, தி சாணக்யா டயலாக்ஸ் என்ற தலைப்பில் உரையாற்றியபோது, இந்தியாவின் மூலோபாய படைகள் கட்டளைக்கு (SFC) குண்டுவீச்சு விமானம் ஒன்றை வாங்க வேண்டும் என கூறினார். மூலோபாய படைகள் கட்டளை என்பது நாட்டின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் ஒரே முப்படை செயல்பாட்டு கட்டளையாகும்.

இந்திய விமானப்படை வாங்க உள்ள பாம்பர் போர் விமானம் Tu-160 பிளாக்ஜாக் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த Tu-160 போர் விமானம் அமெரிக்காவின் B-1 பாம்பர் விமானத்திற்கு சமமானது என கூறப்படுகிறது. இந்த Tu-160 பாம்பர் விமானம் மணிக்கு அதிகப்பட்சம் 2,200 கிலோமீட்டர் மற்றும் பயணவேகம் மணிக்கு 960 கிலோமீட்டர் ஆகும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் Tu-160 பாம்பர் விமானத்தை இந்தியா வாங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 12,300 கிலோமீட்டர் வரம்பை கொண்டுள்ளது. அதிகப்பட்சம் மேக் 2,5 வேகத்தில் பயணிக்ககூடியது. வெற்று எடை 1,10,000 கிலோ மற்றும் அதிகப்பட்ச புறப்படும் எடை 2,75,000 கிலோ ஆகும். 40,000 கிலோ வரை ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடியது. Tu-160 பாம்பர் விமானங்களில் ரஷ்யா மொத்தமாகவே 35 விமானங்களை மட்டுமே தயாரித்துள்ளது.

தற்போது இந்த பாம்பர் விமானங்களை ரஷ்யா மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதன் ஒரு பதிப்பு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குகிறது. இந்த Tu-160 நான்கு குஸ்னெட்சோவ் NK-32 ஆஃப்டர் பர்னிங் டர்போஃபன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இவற்றில் உள் 44,000 கிலோ ஃப்ரீ ஃபால் ஆயுதங்களை எடுத்து செல்லும் திறன் கொண்டவை அல்லது அணு ஏவுகணைக்களுக்கான ஒரு ரோட்டரி லாஞ்சர் வைத்திருக்கும் திறன் கொண்டவை.

இதில் கூடுதல் ஏவுகணைகள் வெளிப்புறமாகவும் எடுத்து செல்ல முடியும். Tu-160 பாம்பர் விமானம் 40,000 கிலோ ஆயுதங்களை எடுத்து செல்லும் நிலையில், இது Su-3 MKI மற்றும் ரபேல் போர் விமானங்களை விட 5 மடங்கு அதிகமாகும். சீனா 12,000 கிலோ மற்றும் 10,000 கிலோ எடையுள்ள பேலோட் திறன்களுடன் H6 மற்றும் H20 ஸ்டெல்த் பாம்பர் விமானங்களை இயங்கி வருகிறது.

H6 பாம்பர் விமானமானது 1000, 1500, 2000 கிலோமீட்டர் நீண்ட தூர பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை எல்லைகளில் இருந்து ஏவ முடியும். இதன் மூலம் இந்த ஏவுகணைகள் இன்னும் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்த முடியும். S-400 ஏவுகணை அமைப்பானது 400 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை மட்டுமே கொண்டுள்ள நிலையில் H6 ஆனது சீன எல்லைக்குள் 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே இந்தியாவை நோக்கி ஏவுகணைகள் செலுத்த முடியும்.

இந்திய போர் விமானங்கள் சீன எல்லைக்குள் நுழைந்து குண்டு வீசுவது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் சீன இராணுவம் நீண்ட தூர முன்னறிவிப்பு ரேடார் நெட்வொர்க்குடன் கூடிய அதிநவீன பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ளது. நீண்ட தூர பாலிஸ்டிக், க்ரூஸ், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை கொண்டு செல்லும் பாம்பர்கள் எதிரிகளை விட நமக்கு கூடுதல் பலமாகும். அணு ஆயுதங்கள் அல்லது ஹைப்பர்சோனிக் க்ளைடு வாகனங்களை வழங்கவும் அவை பயன்படுத்தப்படலாம்.

தற்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை பாம்பர்களை இயக்கி வருகின்றன. பாம்பர்கள் மூலம் நீண்ட தூரம் தாக்குதல் நடத்த முடியும். ஒரு Tu-160 பாம்பர் போர் விமானம் 40,000 கிலோ வரை ஆயுதங்களை சுமந்து செல்லும் நிலையில், 2,500 கிலோகிராம் எடை கொண்ட 16 பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்த Tu-160 பாம்பர்களால் கொண்டு செல்ல முடியும். அதாவது ஒரு Tu-160 பாம்பர் போர் விமானம் 16 சுகோய் விமானங்கள் கொண்டு செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்த ஒரே விமானமே கொண்டு செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published.