கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: IMF

இந்தியா கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என IMF தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வலியுறுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் இதனை IMF தலைவர் கூறியுள்ளார்.

செய்தியாளருக்கு IMF தலைவர் அளித்த பேட்டியில், இந்தியா கிட்டத்தட்ட 1.35 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். மேலும் வெப்ப அலை தாக்கத்தினால் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. இருப்பினும் அதிக நாடுகள் ஏற்றுமதியில் இறங்கியுள்ளதால், இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா எவ்வளவு ஏற்றுமதி செய்ய முடியும் மற்றும் அதன் ஏற்றுமதியை எங்கு வழி நடத்துகிறது என்பதை பொறுத்தது. குறிப்பாக எகிப்து மற்றும் லெபனான் போன்ற நாடுகள் மிக கடுமையான பாதிக்கப்பட்ட நாடுகள். அங்கு நாம் பார்ப்பது பசியின் அபாயம் மட்டுமல்ல, சமூக அமைதியின்மை மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அங்கு ஏற்றுமதிகள் சென்றால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என IMF தலைவர் கூறியுள்ளார். கடுமையான வெப்ப அலையால் கோதுமை உற்பத்தி குறைந்தது மற்றும் அதனால் இந்தியாவில் கோதுமை விலை அதிகரித்ததால் மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

Also Read: இந்தியா 2026 ஆம் ஆண்டே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என IMF கணிப்பு..!

இந்தியா உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளராக உள்ளது. இந்த ஆண்டு இந்தியா 106.41 மில்லியன் டன் கோதுமையை அறுவடை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4,4 சதவீதம் குறைவு என விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: முடிவுக்கு வரும் அமெரிக்காவின் டாலர்.. வளர்ந்து வரும் ரஷ்யாவின் ரூபிள்..

ரஷ்யாவும் உக்ரைனும் கோதுமை உற்பத்தியில் உலக அளவில் 30 சதவீத பங்கை கொண்டுள்ளன. தற்போது இருநாடுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருவதால் கோதுமை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. போர் காரணமாக துறைமுகங்களை பயன்படுத்த முடியாததால் உக்ரைன் கோதுமை ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. மேலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

Also Read: எகிப்தை தொடர்ந்து இந்தியாவிடம் கோதுமை கேட்கும் மேலும் 12 நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.