இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் டீசல் அனுப்பிய இந்தியா..?

இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை தவிர்க்க இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசல் நேற்று இலங்கை சென்றடைந்தது. இது இந்தியாவின் நான்காவது உதவியாகும்.

கடந்த 1996 ஆம் ஆண்டு மின் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 72 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதே இலங்கையில் மிகப்பெரிய மின்தடையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தினமும் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியா அனுப்பிய 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே அவர்களிடம் கொழும்பில் நேற்று ஒப்படைக்கப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா இலங்கைக்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்கியது. பின்னர் எரிபொருள் இறக்குமதிக்காக சமீபத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

Also Read: இந்தியாவிற்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு..

இலங்கைக்கு கடந்த 50 நாட்களில் 200,000 மெட்ரிக் டன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் டீசல் சென்றடைந்த நிலையில் மின் உற்பத்திக்காக LIOC அனல்மின் நிலையத்திற்கு 6,000 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்பட உள்ளது.

Also Read: முதன்முறையாக ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்து சாதனை..! பிரதமர் மோடி வாழ்த்து..!

இதன் மூலம் 13 மணி நேரமாக நீடித்து வரும் மின்வெட்டு 8.5 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், சமையல் எரிவாயு, அதியாவசிய பொருட்கள் பற்றாக்குறை மற்றும் தொடர் மின்வெட்டு ஆகிய காரணங்களால் பொதுமக்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.