இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி.. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தனிமைபடுத்துதல் கட்டாயம்..

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளதை அடுத்து அதற்கு பதிலடியாக இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என கூறியுள்ளது.

இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கிகரித்த போதும் இந்தியாவை அங்கிகரிக்கவில்லை. இந்தியாவில் இருந்து வருவோர் இங்கிலாந்தில் தனிமை படுத்தப்படுவார்கள் என கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இருப்பினும் இங்கிலாந்து அரசின் அங்கிகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லாததால் இந்திய பயணிகளுக்கு தனிமை படுத்துதல் கட்டாயம் என அறிவித்துள்ளது. புதிய விதியின் படி தடுப்பூசி போட்டுகொண்ட இந்தியர்கள் தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள்.

எனவே அவர்கள் இங்கிலாந்து வந்த உடன் 10 நாட்கள் தனிமை படுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. இங்கிலாந்திற்கு வருவதற்கு முன் அவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து ஏற்றுகொள்ளாததால் இந்தியாவும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கிகரித்துள்ளது ஆஸ்திரேலியா..

புதிய அறிவிப்பின்படி, இங்கிலாந்து நாட்டினர் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வருவோர் பயணநேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனா RT-PCR சோதனை செய்திருக்க வேண்டும்.

Also Read: இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.. இராணுவத்தை பயன்படுத்த முடிவு..

விமானநிலையம் வந்த உடன் விமானநிலையத்தில் கொரோனா RT-PCR சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தியா வந்த உடன் 10 நாட்கள் தனிமைபடுத்துதல் கட்டாயம். பின்பு 8வது நாளில் கொரோனா RT-PCR சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த புதிய விதிமுறை அக்டோபர் 4 முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Also Read: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

Leave a Reply

Your email address will not be published.