பாதுகாப்பு தடவாளங்களை உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கு 70,000 கோடி ஒதுக்கீடு..

ஆயுதங்களை இறக்குமதி செய்யும் உலகின் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா என்ற நிலையை நீக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியா தனது பாதுகாப்பு மூலதன பட்ஜெட்டில் ரூ.70,000 கோடிக்கு மேல் உள்நாட்டு துறைக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் 63 சதவீதம் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இது தொழில் துறையை மேம்படுத்தும் என்றும், மற்றொரு எதிர்மறை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

2021-22ம் ஆண்டில் உள்நாட்டு கொள்முதல் திட்டத்தில் 63% முதலீடு செய்ய உள்ளதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் திட்டத்திற்கு சுமார் 70,221 கோடி ரூபாய் முதலீடு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என இந்திய பாதுகாப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (SIDM) ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு பட்ஜெட் குறித்த கருத்தரங்கில் அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு உற்பத்தி சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் உள்நாட்டு கொள்முதல் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அதிகரிப்பு, எம்.எஸ்.எம்.இ.க்கள்(MSMEs) மற்றும் ஸ்டார்ட்-அப்கள் உள்ளிட்ட தொழில்களில் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும். மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு கொள்முதல் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இறக்குமதியைக் குறைப்பதற்கான மற்றுமொரு முக்கிய முயற்சி எதிர்மறையான பட்டியல்(Negative list) ஆகும், இது 2020 முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, DRDO மற்றும் இந்தியத் தொழில்துறையுடன் இணைந்து பொருட்களின் பட்டியலை நமது படைகள் உருவாக்குகின்றன.  விரைவில் வெளியிடப்படும் அடுத்த பட்டியலிலும், இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என் அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். “எங்களது முயற்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதியில் 700% வளர்ச்சியை கொண்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் SIPRI வெளியிட்ட தரவுகளின் படி, உலகின் முதல் 25 ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளதாகவும், ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்வதே இலக்கு என ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *