பொருளாதாரத்தில் ஐரோப்பிய நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்: CEBR கணிப்பு

இங்கிலாந்தின் முன்னணி பொருளாதார ஆலோசனை நிறுவனமான, பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (CEBR) உலக பொருளாதார லீக் தரவரிசையை (WELT) வெளியிட்டுள்ளது. அதில் 2031 ஆம் ஆண்டு அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு இந்தியா பிரான்சை பின்னுக்கு தள்ளி மீண்டும் ஆறாவது இடத்தை பிடிக்கும் என கூறியுள்ளது. CEBR கணிப்பின் படி, 2021ல் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7,314 அமெரிக்க டாலராக உள்ளது. இது குறைந்த நடுத்தர நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் கொரோனா தொற்று மத்தியிலும் GDP 20.1 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. 2021 ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் 8.4 சதவீதமாக குறைந்தது. நான்காவது காலாண்டு சற்று வளர்ச்சியை குறிக்கிறது. ஒட்டுமொத்தமாக 2021 ஆம் ஆண்டு 8.5 சதவீதமாக வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு மற்றும் விவசாய துறையின் அதிகார பரவலாக்கம் போன்ற சீர்திருத்தங்களை பாராட்டிய CEBR, இது நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான உறுதிமொழியை காட்டுகிறது என கூறியுள்ளது. மேலும் இந்தியா 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வலுவான வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டை நாடு கண்டுள்ள நிலையில் உலகளவில் தனது நிலையை மேம்படுத்தி கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் 7வது தரவரிசையில் இருந்து 2031 ஆம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கூறியுள்ளது. இருப்பினும் கொரோனா மாறுபாட்டின் சமீபத்திய கண்டுபிடிப்பான ஒமிக்ரான் மூலம் மீண்டும் அபாயத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருப்பதாக CEBR தெரிவித்துள்ளது.

Also Read: தேயிலை மூலம் கடனை அடைக்கும் இலங்கை.. அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து தப்புமா..?

மேலும் பிற நாடுகளின் தரவரிசையையும் CEBR வெளியிட்டுள்ளது. அதன் படி 2022 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் 100 டிரில்லியன் டாலர்களை தாண்டும் என கூறியுள்ளது. 2030 ஆம் ஆண்டு சீனா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக முதல் இடத்தில் இருக்கும் என CEBR கூறியுள்ளது. 2000 முதல் 2021 ஆம் ஆண்டு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18,931 டாலராக உயர்-நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதார நாடாக மாறியுள்ளது.

Also Read: இந்தியாவில் அமைகிறது TSMC நிறுவனத்தின் சிப் உற்பத்தி ஆலை..? தைவானுடன் பேச்சுவார்த்தை..

சீனாவின் வளர்ச்சி விகிதம் 2020-25ல் ஆண்டுதோறும் 5.7 சதவீதமாகவும், 2025-30ல் ஆண்டுதோறும் 4.7 சதவீதமாகவும், 2030-35ல் ஆண்டுதோறும் 3.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு படிப்படியாக குறையும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அதிக எண்ணிக்கையிலான யூனிகார்ன்களுடன் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

இந்தியாவின் அண்டை நாடுகளின் 2036 ஆம் ஆண்டு தரவரிசையின் படி, பாகிஸ்தான் 37வது இடத்தையும், பங்களாதேஷ் 24வது இடத்தையும், இலங்கை 69வது இடத்தையும் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2036 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முதல் பத்து இடங்களில் சீனா, அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.