ஆறாம் தலைமுறை போர் விமான தயாரிப்பில் இணைய உள்ள இந்தியா..?

இந்தியா உடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெட் போர் தொழிற்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் கூட்டு சேர முன்வந்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், நவீன போர் விமானம் மற்றும் ஜெட் எஞ்சின் மேம்பட்ட தொழிற்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பினரும் ஒத்துழைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தொழிற்துறைக்கு உயர் மட்டத்திலான தொழிற்நுட்பத்தை அணுகுவதற்கு வசதியாக முக்கிய நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இது ஆறாம் தலைமுறை டெம்பெஸ்ட் எதிர்கால காம்பாட் ஏர் சிஸ்டம் திட்டமாகும். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க பிரிட்டன் ஆர்வம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ஏற்கனவே தொழிற்நுட்ப மேம்பாட்டிற்காக ஸ்வீடன் மற்றும் இத்தாலியுடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், உந்துவிசை மற்றும் சென்சார் அமைப்புகளில் ஜப்பானுடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது. BAE சிஸ்டம்ஸ், MBDA, ரோல்ஸ் ராய்ஸ், லியானார்டோ மற்றும் ஸ்வீடனின் SAAB உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் தொழிற்நுட்ப மேம்பாட்டு அம்சத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு BAE சிஸ்டம்ஸின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழு டெல்லிக்கு வந்தது. அந்த குழு டெம்பெஸ்ட் எனப்படும் ஆறாம் தலைமுறை விமானத்தை தயாரிப்பதில் இணைவதற்கு அழைப்பு விடுத்தது. இருப்பினும் அந்த நேரத்தில் இந்தியா திட்டத்தில் சேராததால் எந்த வளர்ச்சியும் இல்லை.

Also Read: இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள்.. முதல் 3 இடத்திற்குள் இந்தியா..

தற்போது ஜெட் விமான திட்டத்தில் இந்தியாவை இணைக்க பிரிட்டன் ஆர்வமாக உள்ளது. இருப்பினும் இந்தியா ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் மூலம் தன்னிறைவு திட்டத்தை செயல்படுத்தி வருவதால் இதில் இணையுமா என தெரியவில்லை. 2018 ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2040 க்குள் சேவையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 2.6 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் முன்னணி நிறுவனம் இங்கிலாந்தை தளமாக கொண்ட BAE சிஸ்டம்ஸ் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்கள் மற்றும் MBDA- ஐரோப்பிய ஏவுகணை டெவலப்பர் ஆயுதங்களை ஒருங்கிணைப்பதில் ஈடுபடுவார்கள். இத்தாலியின் லியானார்டோ ஏவியோனிக்ஸ் மற்றும் சென்சார்களை உருவாக்கும்.

Also Read: இந்திய விமானப்படைக்கு மேலும் 114 மல்டி ரோல் போர் விமானங்கள்..? உள்நாட்டில் தயாரிக்க முடிவு..

இந்த போர்விமானம் ஒற்றை இருக்கை, இரட்டை இயந்திரம், டெல்டா விங் ஸ்டெல்த் போர் விமானமாக இருக்கும். ட்ரோன் திரள்களை நிலைநிறுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் திறன், ஹைப்பர்சோனிக் அல்லது இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுதங்கள் மற்றும் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்தும் திறன், தகவமைப்பு சுழற்சி டர்போன்கள், சிறந்த வெப்ப மேலாண்மை, விசையாழி மையங்களில் உள்ள காந்தங்கள் மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும் டிஜிட்டல் பராமரிப்பு கட்டுப்பாடுகள் ஆகியவை இருக்கும்.

Also Read: ரஷ்யா உடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து..?உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு..

Leave a Reply

Your email address will not be published.