இஸ்ரேல் உடனான உறவை இந்தியா கைவிட வேண்டும்: கம்யூனிஸ்ட் தீர்மானம்

கேரள மாநிலம் கண்ணூரில் நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது கட்சி மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இஸ்ரேல் உடனான இராணுவ உறவை உடனடியாக இந்தியா நிறுத்த வேண்டும்.

மேலும் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் உடன் நெருக்கத்தை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

RSS மற்றும் சியோனெஸ்டுகளுக்கு இடையே உள்ள உறவின் காரணமாகவே இந்திய அரசு இஸ்ரேலை ஆதரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வாக்கவிக்காமல் புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Also Read: ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகா மாணவியை பாராட்டிய அல்கொய்தா தலைவர்..!

இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா கைவிட்டுவிட்டு பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும் என தீர்மானத்தை கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ளது. இருப்பினும் பாலஸ்தீனம் மற்றும் காசா ஆகியவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை பற்றி இந்த தீர்மானத்தில் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.

Also Read: பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கலாம்..

Leave a Reply

Your email address will not be published.