இந்தியா மாலத்தீவு இடையே 50 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது..

மாலத்தீவின் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது. மேலும் மாலத்தீவின் கடல்சார் திறன்களை அதிகரிக்க 50 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு க்ரெடிட் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா திதி, நிதி அமைச்சர் இப்ராஹிம் அமீர், பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ஃபயாஸ் இஸ்மாயில் மற்றும் தேசிய திட்டமிடல், வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மொஹமட் அஸ்லாமுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரண்டு நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள திரு ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சருடன் “நல்லுறவு சந்திப்பு” நடத்தினார். “எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய பயனுள்ள பரிமாற்றம். இந்தியா எப்போதும் மாலத்தீவின் நம்பகமான பாதுகாப்பு பங்காளியாக இருக்கும்” என்று திரு ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

UTF துறைமுக திட்ட ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியா திதி கையெழுத்திடுவதில் மகிழ்ச்சி.
இது மாலத்தீவு கடலோர காவல்படை திறனை வலுப்படுத்தும் மற்றும் பிராந்திய மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண முயற்சிகளுக்கு உதவும் என்று ஜெய்சங்கர் கூறினார்.

திரு. ஜெய்சங்கரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், “பழங்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான சகோதர உறவின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. சிஃபாவருவில் உள்ள கடலோர காவல்படை துறைமுகம் மற்றும் கப்பல்துறை மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கும்” என்று மரியா திதி ட்வீட் செய்துள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் மாலத்தீவுகளின் இரண்டாவது பெரிய நகர்ப்புறபகுதியான அட்டுவில்(Addu) சாலைகளை அமைப்பதற்கான திட்ட செயலாக்க ஒப்பந்தமும் ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *