திரிகோணமலையின் எண்ணெய் சேமிப்பு ஆலையை 50 வருட குத்தகைக்கு எடுத்த இந்தியா.. ஒப்பந்தம் கையெழுத்தானது..?

இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் எரிபொருள் கடனை பெருவதற்கு இலங்கை திரிகோணமலையில் உள்ள 14 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை 50 வருட குத்தகைக்கு இந்தியாவுக்கும் வழங்கும் ஒப்பந்தத்தில் வியாழன் அன்று கையொப்பமிட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. மேலும் இந்த வருடம் இலங்கை 4.5 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அந்நிய செலாவணியை கொண்டு வரும் முயற்சியாக இந்தியாவுடன் எண்ணெய் சேமிப்பு ஆலை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீன தூதர் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சுற்று பயணம் சென்ற நிலையில் இந்த வார இறுதியில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ கொலும்புக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலைங்கை இடையே கையெழுத்தாகி உள்ளது.

2003 ஆம் ஆண்டு மொத்தம் உள்ள 99 சேமிப்பு டேங்குகளையும் இந்தியாவுக்கு குத்தகைக்கு விட ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஒப்பந்தத்தின் படி 14 எண்ணெய் டாங்கிகளை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா IOC 50 வருட குத்தகைக்கு வைத்திருக்கும்.

அதேவேளையில் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்ரேஷனுடன் (CPC) இணைந்து டிரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 61 எண்ணெய் டாங்கிகளை நிர்வகிக்கும். மீதமுள்ள 24 எண்ணெய் டாங்கிகளை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வகிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: இலங்கையின் திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு ஆலையை 50 வருட குத்தகைக்கு எடுத்த இந்தியா..?

2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இந்த திட்டம் இலங்கையை பிராந்திய பெட்ரோலிய மையமாக மாற்ற உதவும் என்றார். வியாழன் உடன்படிக்கைக்கு முன்னரே லங்கா IOC திரிகோணமலை துறைமுகத்தில் உள்ள 99 எண்ணெய் டாங்கிகளில் 15 இயக்கி வந்தது.

Also Read: ISIS அமைப்புடன் தொடர்பு.. காங்கிரஸ் கட்சி MLAவின் மருமகளை அதிரடியாக கைது செய்த NIA..

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் போர் கப்பல் மற்றும் போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்த எண்ணெய் ஆலை கட்டப்பட்டது. பின்னர் 2002 ஆம் ஆண்டு லங்கா LOC 35 வருட குத்தகைக்கு எடுத்தது. தற்போது அதன் புதிய ஒப்பந்தத்தில் 50 வருட குத்தகைக்கு ஒப்பந்தம் வியாழன் அன்று கையெழுத்தானது.

Also Read: இந்த ஆண்டுக்குள் இந்திய-வங்கதேச எல்லையில் முழுவதுமாக வேலி அமைத்து சீல் வைக்கப்படும் என BSF தகவல்

Leave a Reply

Your email address will not be published.