இலங்கையின் திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு ஆலையை 50 வருட குத்தகைக்கு எடுத்த இந்தியா..?

இலங்கையின் திரிகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு ஆலையை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது இந்தியா. இந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட உள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இந்தியாவின் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது நேச நாட்டு போர்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்த எண்ணெய் சேமிப்பு ஆலை கட்டப்பட்டது. இந்த ஆலையில் மொத்தம் 99 எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் உள்ளன.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப்போரின் போது எரிபொருள் விநியோக தளமாக பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேமிப்பு ஆலையை இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இலங்கையின் துணை நிறுவனமான LIOC 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது.

இந்த நிலையில் 99 எண்ணெய் சேமிப்பு தொட்டிகளில் 14 தொட்டிகளை மட்டும் தற்போது 50.வருட குத்தகைக்கு LIOC வைத்திருக்கும் எனவும், இது 2002 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் நீட்டிப்பு என இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலே தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் அடுத்த வாரம் கையெழுத்திட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை சென்றபோது, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

Also Read: குறைந்த கல்வியறிவு திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் பின்தங்கிய பாகிஸ்தான்.. GII அறிக்கை..

மேலும் திரிகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்பு ஆலை தொடர்பாக பிரச்சனையை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் தீர்க்க ஆர்வமாக இருப்பதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார். இலங்கை பயணத்தின் போது ஷ்ரிங்லா திரிகோணமலை எண்ணெய் ஆலையை பார்வையிட்டார். இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே முடிவு எட்டப்பட்டு அடுத்தவாரம் கையெழுத்தாக உள்ளது.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதரவு..?

தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய வெற்றி என எரிசக்தி துறை அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார். மேலும் கச்சா எண்ணெய்க்கு பணம் செலுத்த முடியாத நிலையில் தனது ஒரே சுத்திகரிப்பு ஆலையை இலங்கை மூடிவிட்டது. எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவிடம் கடன் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: அடுத்த ஆண்டு தனது முதல் வெளிநாட்டு பயணமாக UAE செல்கிறார் பிரதமர் மோடி..?

Leave a Reply

Your email address will not be published.