அதிக எண்ணிக்கையிலான யூனிகார்ன்களுடன் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

ஹூருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் குளோபல் யூனிகார்ன் இன்டெக்ஸ் 2021 அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 21 யூனிகார்ன் நிறுவனங்களை புதிதாக சேர்த்து இந்தியா இந்த பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

யூனிகார்ன் என்பது 1 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது இந்திய மதிப்பில் 7,500 கோடி ரூபாயை தாண்டிய நிறுவனங்கள் யூனிகார்ன் என அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா 33 யூனிகார்ன் நிறுவனங்களுடன் இங்கிலாந்திற்கு அடுத்தப்படியாக நான்காவது இடத்தில் இருந்தது.

ஒரே ஆண்டில் 21 புதிய யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்த ஆண்டு இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா புதிதாக 254 யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கி மொத்தம் 487 நிறுவனங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் சீனா புதிதாக 74 யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கி மொத்தம் 301 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. மூன்றாவது இடத்தில் 21 யூனிகார்ன் நிறுவனங்களை புதிதாக உருவாக்கி மொத்தம் 54 நிறுவனங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளன.

இங்கிலாந்து புதிதாக 15 யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கி மொத்தமாக 39 நிறுவனங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளன. யூனிகார்ன் நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் BYJU’S 21 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் உலக அளவில் 15 வது இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ளது.

உலக அளவில் அதிக யூனிகார்ன் நிறுவனங்களை கொண்ட நகரமாக இந்தியாவின் பெங்களூர் 28 யூனிகார்ன்களுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மும்பை மற்றும் குருகிராம் நகரங்களும் இடம் பிடித்துள்ளன. இந்தியர்கள் மொத்தம் 119 யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர்.

அவற்றில் 119 யூனிகார்ன்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ளன. இந்தியாவிற்கு உள்ளே 54 யூனிகார்ன்கள் உள்ளன. BYJU’S 21 பில்லியன் டாலர் மதிப்பில் இந்திய அளவில் முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் இன்மோபி 12 பில்லியன் டாலர் மதிப்பிலும், OYO 9.5 பில்லியன் டாலர் மதிப்பிலும், ரேஸர்பே 7.5 பில்லியன் டாலர் மதிப்பில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Also Read: ரூபேவின் அசுர வளர்ச்சி.. மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசாவும் அமெரிக்க அரசாங்கத்திடம் ரூபே மீது புகார்..

உலக அளவில் மொத்தம் 1,058 யூனிகார்ன்கள் உள்ளன. கடந்த ஆண்டில் உலக அளவில் 586 நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் இது இருமடங்கு உயர்வாகும். மொத்க யூனிகார்ன் நிறுவனங்களில் அமெரிக்காவும் சீனாவும் 74 சதவீதத்தை கொண்டுள்ளன. நார்வே, செனகல், சிலி, செக் குடியரசு, டென்மர்க், பெல்ஜியம், பஹாமாஸ், நெதர்லாந்து, மெக்சிகோ, தாய்லாந்து, வியட்நாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முதமுறையாக யூனிகார்ன் நிறுவனங்களை உரிவாக்கி பட்டியலில் இணைந்துள்ளன.

Also Read: இந்தியா RCEP வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான நடவடிக்கை என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பாராட்டு..

டிக்டாக் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம் 350 பில்லியன் டாலர் மதிப்புடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக அண்ட் குருப் 150 பில்லியன் டாலர் மதிப்புடனும், Space X 100 பில்லியன் டாலர், ஃபிஞ்ச் ஸ்ட்ரைப் 95 பில்லியன் டாலர், Klarna 46 பில்லியன் டாலர், கேன்வா 40 பில்லியன் டாலர், Instacart 39 பில்லியன் டாலர், டேட்டாபிரிக்ஸ் 38 பில்லியன் டாலர், கெய்னியாவோ 34 பில்லியன் டாலர், Revolut 33 பில்லியன் டாலருடன் இந்தியாவின் BYJU’S 21 பில்லியன் டாலர் மதிப்புடன் 15வது இடத்தில் உள்ளது.

Also Read: இந்தியாவில் அமைகிறது TSMC நிறுவனத்தின் சிப் உற்பத்தி ஆலை..? தைவானுடன் பேச்சுவார்த்தை..

இவற்றில் துறை வாரியாக Fintech 139 யூனிகார்ன்களுடன் முன்னணியில் உள்ளது. SAAS அல்லது Software-as-a-Service 134 யூனிகார்ன்களுடனும், இ-காமர்ஸ் 122, செயற்கை நுண்ணறிவு 84, ஹெல்த்டெக் 80, சைபர் செக்யூரிட்டி 40 மற்றும் பயோடெக் 31 யூனிகார்ன்களை கொண்டுள்ளன. ஹூருன் இந்தியாவின் MD மற்றும் தலைமை ஆராய்ச்சியாளர் அனஸ் ரஹ்மான் ஜூனைட் கூறுகையில், இந்தியா ஸ்டார்ட்-அப் ஏற்றத்தில் உள்ளது. ஒரே ஆண்டில் யூனிகார்ன்களை இரட்டிப்பாக்கி உள்ளது என கூறியுள்ளார்.

Also Read: இந்தியா ஏற்றுமதியில் இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டும்: வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்

Leave a Reply

Your email address will not be published.