ஈரான், ஆர்மீனியா உருவாக்கிய பாரசீக வளைகுடா-கருங்கடல் போக்குவரத்து வழித்தடத்தில் இந்தியா..!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹின் மற்றும் ஆர்மேனிய வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்சோயன ஆகியோர் யெரெவனில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சந்திப்பில் ஆர்மீனியா-ஈரான்-இந்தியா ஆகிய முத்தரப்பு போக்குவரத்து தளத்தை உருவாக்குவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.

பாரசீக வளைகுடா-கருங்கடல் போக்குவரத்து வழித்தடத்தில் இந்தியாவின் பங்கை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்துடன் தொடர்புடைய இலக்குகளை செயல்படுத்துவதற்கு ஆர்மேனியா, ஈரான் மற்றும் இந்தியா இடையே ஒரு முத்தரப்பு தளத்தை நாங்கள் உருவாக்க உள்ளோம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆர்மீனிய வெளியுறவு அமைச்சர் கூறுகையில், பாரசீக வளைகுடா-கருங்கடல் போக்குவரத்து வழித்தடத்தில் ஆர்மீனியா ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் பல்கேரியாவை போலவே நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை ஆரம்பித்துள்ளோம். மற்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போக்குவரத்து வழித்தடம் இந்தியாவிற்கும் சுவாரஸ்யமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அனைத்தும் சரியாக நடைபெறும் பட்சத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என ஆர்மீனிய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஆர்மீனியா இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்க துவங்கியுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை போலவே ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து ஈரான் வழியாக சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC) மூலம் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகள் அனுப்பப்படுகின்றன. இந்த வழித்தடம் சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு நேரம் மற்றும் பணமும் வெகுவாக குறைகிறது.

இந்த INSTC வழித்தடம் ரஷ்யாவின் அஸ்ட்ராகான் துறைமுகத்தில் இருந்து ஈரானின் காஸ்பியன் துறைமுகமான அஞ்சலி மற்றும் பந்தம் அப்பாஸ் துறைமுகம் மற்றும் இறுதியாக மேற்கு ஈரான் பகுதியில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு செல்லும். அங்கிருந்து இந்தியாவின் மும்பை துறைமுகத்தை சரக்குகள் வந்தடையும். மேலும் இந்த வழித்தடத்தில் பல நாடுகளும் இணைய உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.