உலகளாவிய $500 B செமிகண்டக்டர் சந்தையில் இந்தியா $85 B வாய்ப்பை கொண்டுள்ளது: IESA

உலகளாவிய 500 பில்லியன் டாலர் குறைகடத்தி உற்பத்தி விநியோக சங்கிலி சந்தையில் இந்தியா 85 பில்லியன் டாலர் வாய்ப்பை கொண்டுள்ளதாக இந்தியா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் செமிகண்டக்டர் அசோசியேஷன் (IESA) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் செமிகண்டக்டர் அசோசியேஷன் அறிக்கையின்படி, இந்திய குறைக்கடத்தி துறையானது பொருட்கள், உபகரணங்கள் மற்றும் சேவை திறன்களை உருவாக்க முடியும். இதன் மூலம் உலகளாவிய குறைக்கடத்தி உற்பத்தி விநியோக சங்கிலியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முடியும்.

இந்திய செமிகண்டக்டர் உற்பத்தி சப்ளை செயின் சுற்றுச்சூழல் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. குறைக்கடத்திகளுக்கான தேவை மற்றும் உலகளாவிய குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பின் வேகமாக மாறிவரும் நிலப்பரப்புடன், உலகளவில் குறைக்கடத்தி விநியோக சங்கிலியில் இந்தியா ஒரு முக்கியமான சப்ளையராக மாற வாய்ப்புள்ளது என இன்டல் இந்தியாவின் மேனேஜர் ஜிதேந்திர சத்தா கூறியுள்ளார்.

இந்திய சுற்றுச்சூழல் அமைப்பு உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், இந்தியாவிற்கான மதிப்பை உருவாக்குவதற்கும் உதவ, IESA ஒரு முக்கிய கோர் இன்ட்ரஸ்ட் குருப்பை (CIG) உருவாக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் உலகளாவிய குறைக்கடத்தி மையமாக மாறுவதை இலக்காக கொண்ட இந்தியா, சிப்கள் மீதான இலக்கை அடைய அதன் தொழிற்நுட்ப துறையில் 30 பில்லியன் டாலர்களை முதலிடு செய்ய உள்ளது.

Also Read: பஜாஜ், TVS நிறுவனங்கள் ஆதிக்கம்.. ஆப்ரிக்காவை விட்டு வெளியேறிய சீன நிறுவனங்கள்..

மத்திய அரசு சமீபத்தில் அதன் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ், குறைக்கடத்தி மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி எலக்ட்ரானிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்காக தனியாக 76,000 கோடி ரூபாய் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக ஈரான் வழியாக இந்தியாவிற்கு சரக்குகளை அனுப்பும் ரஷ்யா..?

Leave a Reply

Your email address will not be published.