உலகின் மிகப்பெரிய போர் விமானங்கள் கொள்முதல் திட்டத்தை பாதியாக குறைத்தது இந்தியா..

இந்திய விமானப்படை தனது மிகப்பெரிய போர் விமான கொள்முதல் திட்டத்தை பாதியாக குறைத்துள்ளது. 114 வெளிநாட்டு போர் விமானங்களுக்கான 20 பில்லியன் டாலர் மதிப்பில் மல்டி ரோல் ஃபைட்டர் ஏர்கிராப்ட் (MRFA) கொள்முதல் திட்டம் தற்போது 57 போர் விமானங்களாக குறைந்துள்ளது.

பாதுகாப்பு கையகப்படுத்துதல் நடைமுறை 2020 இன் படி, பை குளோபல் பிரிவின் கீழ் மீண்டும் துவக்கப்படும் என கூறப்படுகிறது. 57 போர் விமானங்களும் வெளிநாட்டு OEMவில் இருந்து ஒரு இந்திய நிறுவனத்திற்கு தொழில்நுட்பத்தை மாற்றுவதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

இராணுவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு இறக்குமதிகளை குறைப்பதற்கும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறை வளாகத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கத்தின் சுய சார்பு இந்தியா கொள்கையின் கீழ் இந்த விமானக்குறைப்பு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்படும் நிதியின் பெரும் பகுதி உள்நாட்டிற்கே செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் INS விக்ராந்த விமானந்தாங்கி கப்பலுக்காக 57 போர் விமானங்கள் என மதிப்பிடப்பட்ட நிலையில் அவற்றை 26 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தொழிற்துறைக்கு இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 57 ஜெட் விமானங்களை கையக்ப்படுத்துவதற்கான உலகளாவிய டெண்டரை வெளியிடுவதற்காக காலக்கெடு 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளது.

Also Read: புல்வாமா என்கவுன்டர்: காவலரை சுட்டுக்கொன்ற JeM பயங்கரவாதிகள் கைது..?

2018 ஆம் ஆண்டில் 114 போர் விமானங்களுக்கான டெண்டரில், லாக்ஹீட் மார்ட்டின் F-21, Boeing F-15EX, F/A-18 Super Hornet, Dassault Rafale, Saab Gripen, Su-35, MiG-35 மற்றும் ஐரோப்பாவின் யூரோபைட்டர் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பதில்கள் பெறப்பட்டன. பிரான்சிடம் இருந்து இந்தியா ஏற்கனவே 36 ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ள நிலையில், அடுத்த 15 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கையை சுமார் 35 படைபிரிவுகளாக மாற்ற உள்ளது.

Also Read: INS விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்காக 26 போர் விமானங்களை வாங்க உள்ள இந்திய கடற்படை..?

தற்போது இந்திய விமானப்படையில் இரண்டு ரபேல் படைகள் செயல்பட்டு வருகின்றன. 83 LCA Mk-1A போர் விமானங்களின் விநியோகம் 2024 ஆம் ஆண்டில் தொடங்கும். LCA Mk-1 மற்றும் AMCA ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் விநியோகம் 2030 ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கர்நாடகாவில் அமைகிறது ஆசியாவின் மிகப்பெரிய கடற்படைத் தளம்..? INS விக்ராந்தை நிறுத்த முடிவு..

Leave a Reply

Your email address will not be published.