முகமது நபி தொடர்பாக இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை: கேரள ஆளுநர் ஆரிப்கான்

பாஜக தலைவர்களான நூபுர் சர்மா மற்றம் நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்கு இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

கேரள ஆளுநர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கத்தாரும் குவைத்தும் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நாவிடம் வலியுறுத்தியுள்ளன.

இந்த நாடுகள் ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை எப்போதும் விமர்சித்து வருகின்றன. இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா கவலைப்பட தேவையில்லை. தங்களது கருத்தை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உள்ள போது அது எப்படி பிரச்சனை ஆகும்? இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை. தனது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

அனைத்து மரபுகளுக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்வது நமது பாரம்பரியத்தில் உள்ளது. உண்மையில் நாம் அனைத்து மரபுகளையும் ஏற்றுக் கொள்கிறோம் மற்றும் மரியாதை கொடுக்கிறோம் என்பது உண்மை. யாரையும் மற்றவர்களாக கருதுவது இந்தியாவின் கலாச்சாரம் இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய நமது கலாச்சாரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நமது பிரதமர் மோடி மற்றும் RSS தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் கருத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

Also Read: ஜம்மு காஷ்மீர் இல்லாமல் இந்திய வரைபடம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஜி7 நாடுகள்..

யாரும் விடுபட்டுவிடக்கூடாது, அதுதான் நமது கலாச்சார பாரம்பரியம். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். டிவியில் விவாதத்தின் போது நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளனர். அதற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என செய்தியாளர்களிடம் கேரள ஆளுநர் கூறியுள்ளார்.

Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..

Leave a Reply

Your email address will not be published.