இலங்கைக்கு நெல் சாகுபடிக்காக 65,000 MT யூரியாவை அனுப்ப இந்தியா முடிவு..?

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நெல் சாகுபடியில் இடையூறு ஏற்படாத வகையில் இலங்கையின் கோரிக்கையை ஏற்று இந்தியா 65,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க உள்ளது. இதனை இருநாட்டு தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட, உர திணைகளத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை வியாழன் அன்று டெல்லியில் சந்தித்து தற்போதைய யாலா பயிர் சாகுபடிக்கு தேவையான 65,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்குவது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் கலந்தாலோசித்து 65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு வழங்குவதற்கு தேவையான அனுமதிகள் மற்றும் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் சதுர்வேதியின் ஈடுபாட்டிற்காக மொரகொட நன்றி தெரிவித்தார்.

Also Read: இந்தோனேசியாவின் தடையால் மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி..?

இந்தியாவில் யூரியா உரம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா இந்த யூரியாவை இலங்கைக்கு அனுப்ப உள்ளது. இலங்கைக்கு அருகில் உள்ள துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு யூரியா அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ஜனவரி முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கடன்கள், கடன் வரிகள் மற்றும் கடன் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கை வருடாந்திர உர இறக்குமதிக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என கூறப்படுகிறது.

Also Read: உ.பியில் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து சொந்த வீட்டையே இடித்து தள்ளிய ஆலம் சித்திக்..

யாலா என்பது இலங்கையில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நெல் பயிரிடும் பருவமாகும். இதற்காக இந்தயாவிடம் இலங்கை 65,000 மெட்ரிக் டன் யூரியாவை கேட்டுள்ளது. இந்தியா யூரியா வழங்க முன்வந்துள்ள நிலையில் அவற்றை விரைவில் தமிழக துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.