இந்திய நிலைகளை நோக்கி ராணுவ டாங்குகளை நிறுத்தியுள்ள சீனா, தயார் நிலையில் இந்திய ராணுவம்

சீனா 30 முதல் 35 ராணுவ டாங்குகளை ரெசாங் லா, ரெச்சின் லா, முகோசிரி ஆகிய மலை பகுதிகளில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இடங்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவையாகும். இந்திய நிலைகளை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் இந்த டாங்குகள் இலகு ரக நவீன ரகத்தை சேர்ந்தது என கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை தடுப்பதற்கு 17 ஆயிரம் அடி உயரத்தில் நமது ராணுவ டாங்குகளும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சீனா ஏதேனும் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க நம் இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆகஸ்ட்டில் சீனா கட்டுபாட்டில் இருந்த 13 மலைபகுதியை இந்திய ராணுவம் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இராணுவத்திற்கு புதிய ஜெனரலை நியமித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *