ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியனை விட இந்தியா குறைவாகவே எரிபொருள் வாங்குகிறது: அமைச்சர் அதிரடி

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் போது ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயை விட இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் குறைவு என கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இன்று வாஷிங்டனில் நடைபெற்ற 2+2 மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அமெரிக்கா சார்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்க்டன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் அஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று நடைபெற்ற காணொளி வாயிலான கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபிடன் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது தொடர்பாக பார்த்தோமேயானால் உங்கள் கவனம் ஐரோப்பிய யூனியன் மீது இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்குவேன் என கூறினார்.

Also Read: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்துள்ள அமெரிக்கா..?

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கும் கணக்கீட்டை பார்த்தோமேயானால் ஐரோப்பிய யூனியன் ஒரு நாள் மதியம் வாங்கும் எரிபொருளை விட இந்தியா ஒரு மாதத்திற்கு வாங்கும் எரிபொருள் அளவு குறைவானது என கூறினார். எங்கள் எரிபொருள் பாதுகாப்பிற்காக நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குகிறோம் என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Also Read: இந்தியாவிற்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு..

Leave a Reply

Your email address will not be published.