ரஷ்யாவிடம் இருந்து முதல் நாடாக S-500 ஏவுகணை அமைப்பை வாங்குகிறது இந்தியா..?
எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆறாம் தலைமுறை S-500 ஏவுகணை அமைப்பு முதன்முதலாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்ய இராணுவம் விரைவில் S-500 ஏவுகணை அமைப்பின் முதல் தொகுதியை பெறும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சில வாரங்களுக்கு முன் தெரிவித்துள்ளார். S-500 ஏவுகணை அமைப்பு போதுமான அளவு ரஷ்ய இராணுவத்துக்கு வழங்கப்பட்ட பிறகு அவை மற்ற நாடுகளுக்கு விற்கப்படும்.
அதனை வாங்கும் முதல் நாடாக இந்தியா, சீனா இருக்கும் என இராணுவ தொழில்நுட்ப கூட்டாச்சி பேரவையின் இயக்குனர் டிமிட்ரி ஷூகேவ் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை அமைப்பை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு விற்க உள்ளதாக ஷூகேவ் தெரிவித்துள்ளார்.
S-500 Prometey என்பது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஹைப்பர்சானிக் குருஸ் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை இடைமறித்து அழிக்க கூடியது. இதன் தாக்குதல் தூரம் 369 மைல்கள் அதாவது 600 கிலோமீட்டர் தூரம் ஆகும்.
Also Read: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘துஷீல்’ போர்கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
S-400 அமைப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா கூறிய எச்சரிக்கையும் மீறி இந்தியா S-400 மற்றும் S-500 ஏவுகணை அமைப்பை வாங்க உள்ளது.
Also Read: பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக இணைந்த இந்தியா..