ரஷ்யாவிடமிருந்து 70 டாலருக்கும் குறைவாக கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..?

சர்சதேந சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலருக்கும் குறைவாக வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பிப்ரவரி மத்தியில் மோதல் ஏற்பட்டதில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் மோதலுக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மேலும் இந்தியா தனது தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்து வருகிறது.

உக்ரைன் உடனான மோதலால் ரஷ்யாவின் நாணயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடுகட்டும் வகையில் கச்சா எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகளை ரஷ்யாவின் நாணயமான ரூபிளில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ரூபிளில் செலுத்தாத பட்சத்தில் கச்சா எண்ணெய் நிறுத்தப்படும் என கூறியுள்ளது.

Also Read: ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எரிபொருள் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்..

மேலும் இந்தியாவும் அமெரிக்க டாலர்களை தவிர்த்து இந்தியாவின் ரூபாய் மற்றும் ரஷ்யாவின் ரூபிளில் பணத்தை செலுத்த ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி, ரஷ்யாவின் VTB. Sberbank மற்றும் Gazprombank உள்ளிட்ட வங்கிகளுடன் ரூபாய்-ருபிள் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான நிதியை பாதுகாப்பது போன்ற கூடுதல் தடைகளை ஈடுகட்ட, ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கும் குறைவாக வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் கச்சா எண்ணெயை தென்சீனக்கடல் வழியாக சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Also Read: இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்த வேண்டும்: டென்மார்க்

போர் தொடங்கியதில் இருந்து இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் 40 மில்லியன் பீப்பாய்களை வாங்கியுள்ளன. தற்போது ஒரு பீப்பாய் 108 டாலருக்கு விற்பனையாகும் நிலையில் இந்தியா 70 டாலருக்கும் குறைவாக வாங்க ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தடைகளையும் இந்தியா சமாளிக்க வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.