சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் முன்னேறிய இந்தியா.. பின்னடைவில் பாகிஸ்தான்..

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்ட் திறனை வெளியிட்டு வருகிறது. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் படி தரவரசை வெளியிடப்படுகிறது, மேலும் சர்வதேச விமான போக்குவரத்து கழகம் (IATA) வழங்கிய தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த குறியீடு வெளியிடப்படுகிறது.

தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான தரவரிசையை ஹென்லி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 90வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 83வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2020ல் 84வது இடத்திலும், 2016 ஆம் ஆண்டு மாலி மற்றும் உஸ்பெகிஸ்தானுடன் 85வது இடத்திலும் இந்தியா இருந்தது.

கொரோனாவுக்கு முந்தைய ஆண்டான 2019ல் இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் 12.8 மில்லியனுக்கும் அதிகமான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து அதிக அளவில் பாஸ்போர்ட் வழங்கிய மூன்றாவது நாடு இந்தியா ஆகும். 2021 4 ஆம் காலாண்டில் விசா இல்லாமல் பயணிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 58 ஆக இருந்த நிலையில் தற்போது புதிதாக ஓமன் மற்றும் ஆர்மீனியா பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் விசா இல்லாமல் இந்தியர்கள் 60 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இயலும். இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளன. இந்த இரண்டு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் உலகெங்கிலும் 192 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். இது இந்த தரவரிசையின் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் பாஸ்போர்டை விட 166 நாடுகளுக்கு அதிகமாக பயணம் செய்யலாம்.

இரண்டாவது இடத்தில் ஜெர்மனி மற்றும் தென்கொரியா உள்ளன. இந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 190 நாடுளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். மூன்றாவது இடத்தில் பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் ஆகியவை விசா இல்லாமல் 189 நாடுகளுடனும் உள்ளன. நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகியவை 188 நாடுகளுடனும் உள்ளன.

Also Read: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு..

ஐந்தாவது இடத்தில் அயர்லாந்து மற்றும் போர்ச்சுக்கல் 187 நாடுகளுக்கும், ஆறாவது இடத்தில் பெல்ஜியம் நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவை 186 நாடுகளுக்கும், ஏழாவது இடத்தில் ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ், மால்டா ஆகியவை 185 நாடுகளுக்கும், எட்டாவது இடத்தில் போலந்து, ஹங்கேரி 183 நாடுகளுக்கும், ஒன்பதாவது இடத்தில் லிதுவேனியா மற்றும் ஸ்லோவேனியா 181 நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.

Also Read: இந்தியாவில் 5 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பிறகு 21 பங்களாதேஷிகள் சொந்த ஊர் திரும்பினர்..

கடைசி இடங்களில், வடகொரியா 104வது இடத்தில் விசா இல்லாமல் 39 நாடுகளுக்கும், 105வது இடத்தில் நேபாளம் மற்றும் பாலஸ்தீனம் 37 நாடுகளுக்கும், 106வது இடத்தில் சோமாலியா 34 நாடுகளுக்கும், 107வது இடத்தில் ஏமன் 33 நாடுகளுக்கும், 108வது இடத்தில் பாகிஸ்தான் 31 நாடுகளுக்கும், 109வது இடத்தில் சிரியா 29 நாடுகளுக்கும், 110வது இடத்தில் ஈராக் 28 நாடுகளுக்கும், 111வது இடத்தில் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 26 நாடுகளுக்கும் பயணம் செய்யலாம்.

Also Read: பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்ட சிறிது தூரத்தில் பாகிஸ்தான் படகை கைப்பற்றிய BSF..

Leave a Reply

Your email address will not be published.