இலங்கை சீனா இடையே அதிகரிக்கும் மோதல்.. இலங்கை வங்கியை கருப்பு பட்டியலில் வைத்த சீனா..

இலங்கை அரசு இறக்குமதி செய்த உரங்களுக்கு பணம் செலுத்த தவறியதாக கூறி அந்த இலங்கை வங்கியை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது சீனா. இதனால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே இலங்கையில் இரசாயன் உரங்களுக்கு தடை விதித்தார். கரிம மற்றும் உயிரி உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இலங்கை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்தநிலையில் இந்த தடை உடனே நடைமுறைக்கு வந்ததால் உற்பத்திக்கு தேவையான உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அரிசி, உருளை கிழங்கு, தேயிலை, நறுமண பொருட்கள், வெங்காயம் என அனைத்து உற்பத்திகளும் குறைந்தன.

இலங்கைக்கு பெரும் வருவாய் ஈட்டும் தேயிலை உற்பத்தி அதிக அளவில் குறைந்தது. இதனால் மற்ற பொருட்களும் விலை ஏற்றத்தை சந்தித்தன. பால், சர்க்கரை, மண்ணென்ணெய் உட்பட பல பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் இலங்கையில் உணவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் கரிம உரங்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டது. இந்க நிலையில் சீனாவின் குயிங்டயோ சீவின் பயோடெக் குருப் நிறுவனத்துடன் 96,000 டன் கரிம உரம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.

இலங்கைக்கு வந்தடைந்த உரத்தை இலங்கையின் சுகாதார துறையினர் சோதனை செய்ததில் அதில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் சீனாவின் மற்றொரு நிறுவனத்துடன் போடப்பட்ட நிறுவனத்தின் உரத்தை சோதனை செய்தபோது அதிலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

Also Read: சீனாவுக்கு தடை.. இந்தியாவுக்கு அனுமதி.. இலங்கைக்கு கண்டனம் தெரிவித்த சீனா..

இந்த உரம் மண், மரம் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது எனவும், உற்பத்திக்கு பின்பு இதனால் விளைபொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ரியாத்தில் உள்ள பல்கலைகழகத்தின் இலங்கை பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்தன கூறுகையில், சீனாவின் இந்த உரங்களை இலங்கையில் பயன்படுத்தினால் இலங்கை மக்கள் மரபணு ரீதியில் மாற்றப்படலாம் என எச்சரித்தார்.

இந்த நிலையில் அந்த இலங்கை கப்பல் உரத்துடன் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் இந்தியாவிடம் இருந்து இலங்கை கரிம உரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது. உரத்திற்கான பணம் செலுத்தும் படி சீனா இலங்கையை கேட்டுக்கொண்டது. ஆனால் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதால் அந்த LC தொகையை செலுத்த இலங்கை நீதிமன்றம் தடை விதித்தது.

Also Read: அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீன டெலிகாம் நிறுவனங்களுக்கு தடை.. அமெரிக்கா அதிரடி..

இதனால் இந்த ஒப்பந்தம் பரிவர்த்தனை தொடர்பான வங்கியை சீன அரசு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. இலங்கைக்கான சீன தூதர் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தீங்கு விளைவிக்கும் உரங்களை இறக்குமதி செய்ய முடியாது. இலங்கை அரசு நிர்ணயித்த தரத்திலான உரங்களை வேண்டுமானால் இறக்குமதி செய்கிறோம் என ராஜபக்சே கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Also Read: பின்னடைவில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.. திட்டத்தை ரத்து செய்யும் நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.