பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கலாம்..

பஞ்சாப் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கோரிய பொதுநல மனு மீதான விசாரணையில் சம்மந்தப்பட்ட மாநிலங்கள் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லி பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதிலளித்த சிறுபான்மை விவகார அமைச்சகம், சிறுபான்மையினராக உள்ள மாநிலங்களில் அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 வது பிரிவின்படி, சம்மந்தப்பட்ட மாநிலங்கள் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்து, யூதம், பஹாப் மதத்தை பின்பற்றுபவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களில் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்க முடியுமா என்பது தொடர்பான விஷயங்களை மாநில அளவில் பரிசீலிக்கலாம் என சிறுபான்மை விவகார அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

NCMEI சட்டத்தின் பிரிவு 2(f) இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்களை அடையாளம் காணவும் அறிவிக்கவும் மையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. மாநில அரசுகள் ஒரு மத அல்லது மொழியியல் சமூகத்தை சிறுபான்மை சமுகமாக அறிவிக்க முடியும் என சிறுபான்மை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: காசி விஸ்வநாதர் கோவில்-ஞானவாபி மசூதி வழக்கை மார்ச் 29 அன்றைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்…

உதாரணமாக மகாராஷ்ட்ரா அரசு யூதர்களை அந்த மாநிலத்திற்குள் சிறுபான்மை சமூகமாக அறிவித்துள்ளது.
அதேபோல் கர்நாடகா அரசு அந்த மாநிலத்திற்குள் தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், மராத்தி, துளு, லமணி, இந்தி, கொங்கனி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளை சிறுபான்மை மொழிகளாக அறிவித்துள்ளது.

லக்சத்தீவு, மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவில் உள்ள காரணத்திற்காக உபாத்யாய் தனது பொதுநல மனுவில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கோரியிருந்தார்.

Alao Read: விஸ்வ கல்யாண் மகாயக்யா மூலம் இந்து மதத்திற்கு திரும்பிய 1250 கிறிஸ்துவர்கள்.

இதற்கு முன் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான பெஞ்ச் பலமுறை மத்திய அரசிடம் விளக்கம் கேட்டும் பதிலளிக்கததால் ஜனவரி 7 ஆம் தேதி மத்திய அரசுக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கலாம் என கூறியுள்ளது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.