பாகிஸ்தானில் பெட்ரோல் 30 சதவீதமும், டீசல் 20 சதவீதமும் விலை உயர்வு..
அண்டை நாடான பாகிஸ்தானின் வியாழன் நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை முறையே 30 மற்றும் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு வியாழன் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை 30 சதவீதமும், டீசல் விலையை 20 சதவீமும் உயர்த்தியது. தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல் 30 சதவீதம் உயர்ந்து 179.85 பாக். ரூபாய்க்கும், டீசல் 20 சதவீதம் உயர்ந்து 174.15 பாக். ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுதவிர மண்ணெண்ணெய் மற்றும் மற்ற டீசல் விலையும் முறையே 155.95 மற்றும் 148.41 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் வியாழன் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், வியாழன் அன்று விலையேற்றத்திற்கு முன்பே மக்கள் பெட்ரோல் பங்கில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று பழைய விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசலை வாகனத்தில் நிரப்பி சென்றனர்.
பொருளாதாரம் மற்றும் பண நெருக்கடியை மேற்கொள்ளும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் 900 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால் ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் விலையை உயர்த்தும் போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதனாலயே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Also Read: நேட்டோவில் இணைய உள்ள பின்லாந்து.. சைமா பிரச்சனையை தூசி தட்டிய ரஷ்யா..
பாகிஸ்தானின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது இந்தியாவில் விற்கப்படுவதை விட கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல நகரங்களில் 100 ரூபாய்கும் கீழ் குறைந்தது. டெல்லியில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 89.62 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
Also Read: கனடாவின் எதிரி அமெரிக்கா தான்.. கனடா உளவுத்துறை அறிக்கை தாக்கல்..?
இந்த நிலையில் பாகிஸ்தான் கார்களை இறக்குமதி செய்ய முழுமையாக தடை விதித்துள்ளது. வியாழன் கிழமை அறிவிக்கப்பட்ட தடை உத்தரவில், வாகனங்கள், மொபைல்போன்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Also Read: பாகிஸ்தானில் பொருளாதாரம், தண்ணீரை தொடர்ந்து தற்போது கோதுமை நெருக்கடி..?
பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான் ஷெபாஸ் ஷெரீப் அரசை கடுமையாக சாடினார். இந்தியாவில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதை சுட்டி காட்டி இந்திய அரசை அவர் மீண்டும் பாராட்டினார்.