இந்தோனேசியாவின் தடையால் மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி..?

இந்தோனேசியாவின் கணிக்க முடியாத பாமாயில் ஏற்றுமதி கொள்கையால், இந்தியாவின் பாமாயில் சப்ளையராக மலேசியா மாறக்கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தியாளரான இந்தோனேசியா, அதன் ஒழுங்கற்ற ஏற்றுமதி கொள்கையால் ஏப்ரல் 22 அன்று பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் இந்தியா மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதியை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமாயில் ஏற்றுமதி வரிகளை பாதியாக குறைப்பதன் மூலம் இந்தோனேசியாவின் தடையை பயன்படுத்தி மலேசியா தன்னை நிலைநிறுத்தி கொள்கிறது என மலேசியாவின் சரக்குகள் அமைச்சர் ஜூரைடா கமருடின் தெரிவித்துள்ளார். அக்டோபர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு சந்தை படுத்துதல் ஆண்டில் இந்தியாவுக்கான இந்தோனேசியாவின் பாமாயில் ஏற்றுமதி 35 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது முன்பு 75 சதவீதமாக இருந்ததாக சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கணிக்க முடியாத கொள்கைகளால் மலேசியா மிகப்பெரிய பயனடைவதாக SEA நிர்வாக இயக்குனர் பி.வி.மேத்தா கூறியுள்ளார்.

Also Read: ஜம்முவின் செனாப் ஆற்றில் நீர்மின்நிலைய கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு..

இந்தோனேசியா தற்போது சந்தையில் இல்லாததால் மலேசியா தற்போது அதிக விலைக்கு பாமாயிலை விற்பனை செய்கிறது. மே மாதத்திற்கான வர்த்தக மதிப்பீடுகளின்படி, இந்தியா சுமார் 5,70,000 டன் பாமாயிலை இறக்குமதி செய்துள்ளது. மலேசியாவில் இருந்து 290,000 டன் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து 240,000 டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

மும்பையை சேர்ந்த சுத்திகரிப்பு நிறுவனம் கூறுகையில், இந்தோனேசியாவை மட்டும் நம்பி தொழில் நடத்த முடியாது, இந்தோனேசியா மலேசியாவை விட தள்ளுபடியில் எண்ணெய் வழங்கினாலும், இந்தோனேசியாவின் கணிக்க முடியாத கொள்கையினால், மலேசியாவிடம் இருந்து பாமாயிலை பெற வேண்டும் என கூறியுள்ளது.

Also Read: பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?

இந்தோனேசியா இந்த மாதத்தில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கலாம், ஆனால் அந்நாடு மீண்டும் தடை விதிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மலேசியாவின் ஏற்றுமதி கொள்கை நிலையானது, அதைதான் நாங்கள் விரும்புவதாக இந்திய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.