2028ல் உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என IMF அறிக்கை..!

2021-22 ஆம் நிதியாண்டில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த நிலையில், 2029 ஆம் ஆண்டு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என உலக நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.

தற்போது இந்தியா 10 பில்லியன் டாலர் இடைவெளியில் ஐந்தாவது இடத்தை இங்கிலாந்து மீண்டும் பிடித்துள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியா மீண்டும் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் என IMF கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி, 2027-28 ஆம் நிதியாண்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்.

2026-27 க்குள் இந்தியாவின் பொருளாதாரம் 4.94 டிரில்லியன் டாலராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 2027-28 ஆம் நிதியாண்டில் இநதியாவின் பொருளாதாரம் 5.36 டிரில்லியன் டாலராக இருக்கும். அதேசமயம் ஜப்பானின் பொருளாதாரம் 5.17 டிரில்லியன் டாலராக இருக்கும். இதன் மூலம் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயரும் என IMF தெரிவித்துள்ளது.

IMF தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3.47 டிரில்லியனாக மாறும். அதேநேரம் இங்கிலாந்தின் பொருளாதாரம் 3.2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் என கூறியுள்ளது. 2026 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கு சமமாக 4.55 டிரில்லியன் டாலருக்கு இருக்கும் என IMF கணித்துள்ளது.

வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் இந்தியா சில காலமாக மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருந்து வருகிறது. இது 2028 ஆம் நிதியாண்டு வரை தொடரும் என IMF கூறியுள்ளது. IMF அறிக்கையின் படி, 2028 ஆம் ஆண்டு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும்.

Leave a Reply

Your email address will not be published.